கடந்த ஞாயிறு இரவு அதிபரால் கூட்டப்பட்ட கூட்டத்துக்கு சாதாரண தர மாணவர்கள் அனைவரது பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர். கல்வி நிலை வீழ்ச்சியடைந்திருப்பதை அதிபரும் ஆசிரியர்களும் ஏற்றுக் கொண்ட போதிலும் அதற்கான முழுப் பொறுப்பையும் பாடசாலை நிர்வாகமோ ஆசிரியர்களோ ஏற்றுக் கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டனர். ஆண் மாணவர்கள் படிப்பில் ஆர்வமிலாமல் இருப்பதோடு படிக்கின்ற சில மாணவர்களுக்கு பெரும்பாலான மாணவர்கள் இடைஞ்சலாக இருப்பதையும் ஆசிரியர்கள் சுட்டிக் காட்டினர்.
இதற்குப் பரிகாரமாக இரவு நேர வகுப்புகளை ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஆண்மாணவர்கள் கட்டாயமாக இவற்றில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் மாணவிகள் கலந்து கொள்வதாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் பெற்றோர்களே ஏற்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இருக்கின்ற கொஞ்ச நாட்களில் இவ்வாறான ஊக்குவிப்பை மாணவர்களுக்கு வழங்குவதால் நல்ல ஒரு பெறுபேற்றைப் பெற முடியுமென ஆசிரியர்களும் பெற்றோரும் நம்புவதாகவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.


Any how, if boys studied well only they will get good result in exam. Girls are, as usual get good results. insha allah, will wait and see this year O/L result. my dua for our school.
Muneer
தற்போது நமது பாடசாலையிலும் இரவு நேர வகுப்பு நடாத்துகிறார்கள். ஒரு ஆசிரியருக்கு ஒரு நாள் வகுப்பெடுத்தால் 400 ரூபா கொடுக்கப்படுகிறதாம். என்ன ஆசிரியர்களின் இரவுக் கொள்ளை. மஃறிபானால் வீடுகளில் இருக்குமாறு நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். ஏனெனில் அந்த நேரத்தில்தான் ஷைத்தான் வெளிவருவதாக ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பெண்பிள்ளைகள் இந்த நேரத்தில் வெளியில் திரிவது உகந்ததல்ல. அல்லாஹ்தான் இவர்களைப் பாதுகாக்க வேண்டும். நமது இஸ்லாமிய வாதிகளுக்கு இந்தப்பாவம் தெரியவில்லை போலும்….
400 rupawa? oru naalaikka? naan ninaiththen, iwarkal etho urukku nalawu seyya padichi kodukkiraarkal endru. panaththukkakawa? kewalam.
கஹட்டோவிட்டாவின் வானை கந்தின் வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்த ஆசநிக்காய் மரம் இன்று காலை(27.6.10) வெட்டப்பட்டுவிட்டது.