அத்தனகல்ல ஓயா ஆற்றுக்குக் குறுக்காக அமைந்தள்ள கஹடோவிட பாலத்துக்கு அருகாமையில் கடந்த திங்கட்கிழமை கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பொறுக்கிய பந்து போன்ற ஒரு பொருளை வீட்டுக்கு எடுத்துச் சென்று விளையாட முற்பட்டிருக்கின்றனர். வித்தியாசமாக இருக்கின்ற இப்பொருளைக்கண்ட சிறுவனின் பெற்றோர் உடனடியாக தூர எறிந்து விட்டு பொலிசாருக்கு அறிவித்தள்ளனர்.
ஸ்தலத்துக்கு வந்த பொலிசார் குறிப்பிட்ட பொருள் கைக்குண்டு என்பதை உறுதிப்படுத்தியதோடு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் 2010ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று (2010.02.24) பி.ப. 2.45 மணியளவில் ஆரம்பித்து 6.30 மணியளவில் நிறைவு பெற்றது.
அதிபர் புஹாரி உடயார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மேல் மாகாண சபை உறுப்பினர் கோகிலா குணவர்த்தன அத்தனகல்ல வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. அஜித் விஜேசுந்தர ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டதோடு ஊர்ப் பிரமுகர்கள் பலரும் பங்குபற்றி சிறப்பித்தனர்.
மாணவர்களது சுவாரசியமான போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
சபா மர்வா மினா ஆகிய இல்லங்களுக்கிடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளின் இறுதியில் இல்லங்கள் பெற்ற புள்ளிகள் இதோ
முதலாம் இடம் மினா இல்லம் புள்ளிகள் 139
முதலாம் இடம் சபா இல்லம் புள்ளிகள் 139
இரண்டாம இடம் மர்வா இல்லம் புள்ளிகள் 131
இதுவரை காலமும் ஓகொடபொல வெயாங்கொட ஆகிய இடங்களுக்கிடையில் நடைபெற்றுவந்த பஸ் சேவை கடந்த 2010.02.22 ஆம் திகதி முதல் கஹடோவிட வரை நீடிக்கப்பட்டுள்ளது. கம்பஹா தனியார் பஸ் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள் திங்கட்கிழமை காலை அல் பத்ரியா பாடசாலைக்கு முன்னாலிருந்து சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த பஸ் சேவை முஹியித்தீன் ஜூம்மா பள்ளிக்கு அருகாமையிலிருந்து ஆரம்பித்து மஸ்ஜிதுன்னூர் பள்ளிவாசல் வீதியூடா ஓகொடபொல பள்ளிவாசல் வீதியால் பயணித்து ஓகொடபொல சந்தி (எட்டுக்கால் கடை) வழியாக திஹாரிய நிட்டம்புவ ஊடாக வெயங்கொடை வரை நடைபெறுகின்றது.
இரண்டாவது நாளாக சேவை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கஹடோவிட ஓகொடபொல திஹாரிய பிரதேச மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.
கஹடோவிட்ட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேகிள் நிர்வாகத்தினரின் அயராத முயற்சியால் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் இவ்வாண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. மாணவிகளுக்கான பல போட்டி நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றதோடு நாளையும் போட்டிகள் இடம் பெறும் எனவும் புதன்கிழமை போட்டிகளின் இறுதி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் இடம் பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஸபா, மர்வா ,மினா என மூன்று இல்லங்களாகப் பிரிந்து மாணவிகள் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.
அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ.
இந்த பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகுஇ அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.
தாய்லாந்தில் காணப்படும் ‘பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.
இறைவன் திருமறையில்..
நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன். (அல்குர்ஆன் 14:34)
பாலிகாவின் காணிணிலிருந்து அயலவருக்கு தவறுதலாக பெறப்பட்டிருந்த காணியின் அளவுக்குச் சமமான காணியை பெற்றுக் கொடுக்க தாம் உரிய நடவடிக்கையை எடுத்தள்ளதாக காணி உரிமையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாதிபிய்யாத் தக்கியாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் மூலமாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
பாலிகாவுக்கு அருகாமையில் தனது வீடு அமைந்துள்ளதாகவும் வீட்டை விரிவாக்குகின்ற போது வேலிகள் ஒழுங்காகக் காணப்படாமையினால் தவறுதலாக தாம் பாடசாலைக் காணியின் ஒரு பகுதியை உட்படுத்தியுள்ளதாகவும் நீண்ட நாட்களின் பின்னரே தமக்கு இவ்விடயம் தெரிய வந்ததாகவும் உடனேயே உரியவர்களைத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இழப்பீட்டை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரியப்படுத்தியிருந்ததாகவும் தற்போது பாடசாலைக் காணியுடன் சேர்ந்த காணியை மிக விரைவில் பெற்றுத் தரவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பாதிபிய்யா அங்கத்தவர்கள் பலர் தமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு தெரியாமல் நடந்த தவறை திருத்திக் கொள்ள முன்வந்த அவரின் முன்மாதிரியையும் பாராட்டியுள்ளனர்.
ஊரில் பாடசாலையையும் முதன்மைப்படுத்தி சில நாட்களாக இருந்து வரும் பரபரப்பு நிலை மேலும் தொடர்து கொண்டே இருக்கின்றது. யுhர் தரப்பில் நியாயம் என்று கண்டு பிடிக்க முடியாதளவுக்கு செய்திகள் காற்றோடு கலந்து வருகின்றன. பாடசாலை மாணவர் பக்கம் நீதியிருப்பதாக சிலரும் பாடசாலை நிர்வாகத்தின் பக்கம் நியாயமிருப்பதாக பலரும் பேசி வருகின்ற நிலையில் இன்னும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரலாம் எனவும் தெரிகிறது. எது எவ்வாறாயினும் நியாயமான முறையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அப்பாவி மாணவர்கள் நிம்மதியாக கல்வியைத் தொடர வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எமது அவா.
கஹடோவிட பாலிகாவில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா அண்மையில் நடைபெற்றது. மௌலவி M.N.M. இஜ்லான் அவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்தார். இந்த நிகழ்வுக்கு அதிபர் புஹாரி உடயார் தலைமை தாங்கினார்.
முஜீப் மௌலவி அவர்களுடைய முயற்சியினால் அரபு நாட்டு கொடை வள்ளல் ஒருவரின் நிதி உதவியோடு நிர்மாணிக்கப்படவுள்ள இக்கடடத்தின் கீழ் மாடியில் வகுப்பறையும் மேல் மாடியில் பள்ளிவாசலும் அமைக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று காலை அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக மாணவர் குழுக்களிடையே இருந்து வந்த முணை;பாடு இன்று பாடசாலையினுள்ளேயே அடிதடியில் ஈடுபடும் அளவுக்கு மோசமடைந்துள்ளது. பாடசாலை மாணவர்களிடையே சமீபகாலமாக அதிகரித்து வந்த ஒழுக்கவீனமான செயல்கள் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் கட்டுப்படாமை போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு இவற்றை சீர்திருத்துவதற்காக கடந்த சில நாட்களாக அதிபரும் ஆசிரியர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து பலவேறு முயற்சிகளை பல மட்டங்களிலும் மேற்கொண்டு வந்ததாகவும் அதன் ஒரு அங்கமாக இன்றைய தினம் உயர்தர மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடலொன்று பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.