Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif
Month: January 2010
ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி - January 31, 2010 by Media Voice Of Kahatowita
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு 95 சதவீதமான மிகப்பெருன்பான்மை வாக்குகளை அளித்த கஹடோவிட ஓகொடபொல குரவலான உடுகொட பிரதேச முஸ்லிம் வாக்காளர்களுக்கு அத்தனகல்ல பிரதேச சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்   உறுப்பினர் கஹடோவிட கமால் அப்துல் நாஸர் நன்றி தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோழிக்கடை அலசல்கள் - January 30, 2010 by Media Voice Of Kahatowita

கஹடோவிட நிகழ்வுகளை அலசுவதில் ஹிசாம் ஹாஜியாரின் கோழிக்கடை வகிபங்கு முக்கியமானதாகும்.எனவே அங்கு அலசப்படும் முக்கிய செய்திகளும் விமரிசனங்களும் இப்பகுதியில் இடம்பெறும் வெளிநாட்டுச் சகோரர்களும் இனி அங்கிருந்தே கோழிக்கடைக்கு வரலாம்.

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் செல்வாக்கு சரிவு; அவரது பேச்சை 4 1/2 கோடி மக்களே கேட்டனர் - January 30, 2010 by Media Voice Of Kahatowita

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டு பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவரது பேச்சை அமெரிக்காவில் உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டு ஒளிபரப்பின. அப்போது அவரது பேச்சை அமெரிக்கர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். எத்தனை சதவீதம் பேர் அவரது பேச்சை கேட்டனர் என்று நீல்சன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அதில் அவரது செல்வாக்கு சரிந்து இருப்பது தெரிய வந்தது.
ஏனெனில் அவரது சமீபத்திய பேச்சை 48 மில்லியன் (4 கோடியே 80 லட்சம்) பேர் மட்டுமே கேட்டுள்ளனர். புஷ் ஜனாதிபதியாக இருந்தபோது அவரது முதல் பேச்சை 40 மில்லியன் (4 கோடி) மக்களே கேட்டனர்.
அதே சமயம் ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்து கடந்த 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஆற்றிய உரையை 62 மில்லியன் (6 கோடியே 20 இலட் சம்) பேர் கேட்டனர்.
ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் 1993ம் ஆண்டு முதன் முதலாக பில் கிளின்டன் ஆற்றிய உரையை 66.9 மில்லியன் (6 கோடியே 69 லட்சம்) பேர் கேட்டனர். ஜனாதிபதி ஒபாமா பதவி ஏற்றவுடன் அவரது முதல் பேச்சை 52.3 மில்லியன் (5 கோடியே 23 இலட்சம்) பேர் கேட்டுள்ளனர்.
இதற்கு காரணம் அமெரிக்க மக்களிடையே ஜனாதிபதி ஒபாமா மேல் உள்ள கோபமே என தெரிகிறது. ஏனெனில் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை வேலையில்லா திண்டாட்டம்இ அவற்றை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்காதது போன்றவையே காரணம் என கூறப்படுகிறது

File System என்றால் என்ன? - January 29, 2010 by Media Voice Of Kahatowita

பைல் சிஸ்டம் எனப்படுவது ஹாட் டிஸ்கில் பதியப்படும் பைல்களைக் இயங்கு தளம் கையாளும் ஒரு வழி முறையாகும். பல்லாயிரம் பைல்கள் உங்கள் கணினியில் இருக்கலாம். எனினும் அவற;றை ஒழுங்காகப் பேணவும் நிர்வகிக்கவும் ஒரு வழி முறை இல்லையெனின் கணினி நத்தை வேகத்திலேயே இயங்கும்.

உதாரணமாக ஒரு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை முறைப்படி ஒழுங்காக வைக்காமல் ஒவ்வோரிடத்தில் சிதறிக் கிடந்தால் தேவையான நேரத்தில் ஒரு பைலைத் தேடிப் பெற எவ்வளவு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்? முறையான ஒரு பைல் சிஸ்டம் இல்லையாயின் இது போன்ற ஒரு நிலையையே கணினியும் எதிர் கொள்ளும்.

வீடுகளிலோ அலுவலகத்திலோ பலரும் பல விதமன முறைகளில் பொருட்களை ஒழுங்கு படுத்துவது போல் கணினியிலும் பைல்களை ஒழுங்கு படுத்துவதில் FAT16, FAT32, NTFS எனப் பல வழி முறைகள உள்ளன. இவை ஓவ்வொன்றும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளதுடன் அவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகளும் உள்ளன.

ஹாட் டிஸ்கில் உள்ள வெற்றிடத்தில் டேட்டாவை சேமிப்பதில் காட்டும் திறன்

ஹாட் டிஸ்கில் உள்ள பைல்கள் அனைத்தையும் பட்டியலிடுதல் மூலம் அவற்றை விரைவாக மீட்டுக் கொள்ளும் திறன்

பைல்களை அழித்தல், பெயரிடுதல். பிரதி செய்தல், இடம் மாற்றுதல் போன்ற பைல் சர்ந்த அடிப்படை விடயங்களை மேற்கொள்ளுதல் எனபன பொதுவான பண்புகளாகும்.

இந்த அடிப்படை விடயங்களுடன் சில பைல் சிஸ்டம் பைகளைச் சுருக்குதல் (Compression) , குறியீட்டு முறைக்கு மாற்றுதல் (Encription), கடவுச் சொல் (password) மூலம் பாதுகாப்பளித்தல் போன்ற கூடுதல் வசதிகளையும் கொண்டிருக்கும்.

FAT16 (File Allocation Table) என்றால் என்ன? எம்.எஸ்.டொஸ் இயங்கு தளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட. இந்த பைல் சிஸ்டம் அதிக பட்சம் 2GB கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கிற்கே பொருந்தும்.

ஹாட் டிஸ்கில் டேட்டா மெல்லீய பொது மையம் கொண்ட ட்ரேக்ஸ் (Tracks) எனும் பாதையிலேயே பதியப்படுகின்றன. ஒவ்வொரு ட்ரேக்கும் செக்டர்ஸ் (Sectors) எனும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு ட்ரேக்கும் ஒரே அளவான செக்டர்களைக் கொண்டிருக்கும். டிஸ்கில் உள்ள டேட்டாவை பதியும் மிகவும் சிறிய பகுதியே செக்டர் ஆகும். ஒரு செக்டரின் அளவு 512 பைட்டுகளாகும். ஹாட் டிஸ்கை போமட் செய்யும் போதே இவ்வாறு பிரிக்கப்படுகின்றன..

இந்த இடத்தில் நான் ஒரு “கணக்கு வாத்தியார்” வேலை பார்க்க வேண்டியுள்ளது.

ஹாட் டிஸ்கின் மொத்த கொள்ளளவு 10 கிலோ பைட் எனின் அந்த ஹாட் டிஸ்க் 20 செக்டர்களாகப் பிரிக்கப்படும். எனினும் இயங்குதளமானது நேரடியாக ஒவ்வொரு செக்டரையும் அணுகுவதில்லை. மாறாக அது பல செக்டர்களை ஒன்று சேர்த்து க்ளஸ்டர் (Cluster) எனும் ஒரு அணியாக மாற்றி அதனையே அணுகுகின்றது. இதனை (Allocation Unit) எனவும் அழைக்கப்படும்.

உதாரணமாக ஒவ்வொரு செக்டரையும் ஒரு பையை கையில் வைத்திருக்கும் ஒரு நபருக்கு ஒப்பிடுங்கள். ஒவ்வொரு பையிலும் 512 பைட் டேட்டாவையே சேமிக்க முடியும். ஒவ்வொரு நபரையும் 1,2,3 என இலக்கமிடாமல், பைல் சிஸ்டமானது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஒன்று சேர்த்து ஒரு அணியாக மாற்றி அவர்களை முதலாவது அணி எனப் பெயரிடுகிறது. மொத்தமாக 400 பேர் இருப்பார்கள் எனின் பைல் சிஸ்டம் அணிக்கு நால்வராக 100 அணிகளாகப் பிரித்துக் கொள்ளும்.

இன்னொரு வகையில் சொல்வதானால் 400 செக்டர்கள் கொண்ட ஒரு ஹாட் டிஸ்கில் (200 கிலோபைட்) பங்கீட்டு அளவாக 4 செக்டர்களை ஒரு க்ளஸ்டர் கொண்டிருப்பின் மொத்தமாக 100 க்ளஸ்டர்கள் காணப்படும்.

பைல் சிஸ்டமானது ஒரு குறித்த செக்டரை அணுக வேண்டுமானால், முதலில் அந்த செக்டர் இடம் பெறும் க்ளஸ்டர் இலக்கத்தையே அணுகும். அந்த க்ளஸ்டருக்குள் செக்டரின் தொடரிலக்கத்தின் மூலம் உரிய செக்டரை அடையும். அதாவது ரிம்ஸி எனும் நபரைக் கண்டு பிடிக்க ரிம்ஸி இடம் பெறும் அணியை முதலில் அணுகி அங்கு ரிம்ஸியைக் கண்டு பிடிப்பதற்கு ஒத்ததாகும்.

FAT16, FAT32 மற்றும் NTFS எனும் மூன்று பைல் சிஸ்டங்களும் இம்முறையிலேயே இயங்குகின்றன. அப்படியானால் இவற்றுக் கிடையே என்ன வேறுபாடு உள்ளன?

முக்கிய வேறுபாடு யாதெனில் ஒவ்வொரு பைல் சிஸ்டமும் ஹாட் டிஸ்கில் எவ்வளவு வெற்றிடத்தைக் கையாளும் திறன் வாய்ந்தது என்பதிலேயே தங்கியுள்ளது. பைல்களைக் கையாளும் திறனில் காணப்படும் பாரிய சிக்கல் யாதெனில் ஹாட் டிஸ்கில் ஒவ்வொரு க்ளஸ்டரும் ஒரு பைலை மட்டுமே சேமிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஒரு விடயத்தை மாத்திரமே கையாளும்.
- January 29, 2010 by Media Voice Of Kahatowita

வெற்றிக் கொண்டாட்டம் களை கட்டவில்லை

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஊரிலுள்ள ஸ்ரீ.ல.சு.க. ஆதரவாளர்கள் வெற்றியை ஆரவாரமாகக் கொண்டாட முயற்சித்த போதும் மக்களது ஆதரவு கிடைக்காததால் அம்முயற்சி கைகூடவில்லை. எனினும் பல்லாயிரக்கணக்கான ரூபா பெறுமதியான பட்டாசுகளைக் கொழுத்தி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வெருவரதும் உரிமை வெற்றியும் தோல்வியும் அல்லாஹ்வின் பக்கத்திலிருந்தே வருகின்றது. இப்படி ஏன் பணத்தை வீண் விரயம் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இது நான் சம்பாதித்த பணம் அல்ல. மஹிந்த வெற்றி பெறுவார் என்று பந்தயம் (ஒட்டு) கட்டியதில் வெற்றி பெற்ற பணம் என விளக்கம் கூறியிருக்கிறார் ஸ்ரீ.ல.சு.க. ஆதரவாளரான ஒரு பிரமுகர்.

எப்படியிருக்கிறது விளக்கம் !……………

- January 27, 2010 by Media Voice Of Kahatowita

கஹடோவிடவில் அமைதியான தேர்தல் – சுறுசுறுப்பான வாக்களிப்பு

26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கஹடோவிட மக்கள் சுறுசுறுப்பாகவும் அமைதியாகவும் வாக்களித்தனர். தேர்தல் தினத்தில் எந்த விதமான குழப்ப நிலைகளும் ஏற்படவில்லை. பதிவு செய்யப்பட்டடிருந்த 1821 வாக்குகளில் 1339 வாக்குகள் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு வாக்குகள் அளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இதே வேளை தேர்தல் முடிவுகளில் பெரும்பாலானவை வெளிவந்திருக்கின்ற இப்போதைய நிலையில் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி தெளிவாக இருப்பதாகத்  தெரிகின்றது.

- January 26, 2010 by Media Voice Of Kahatowita
தேர்தல் தினத்துக்கு முந்திய இரவில் ஊருக்குள் புகுந்த ஆளுந்தரப்பு காடையர்கள் அட்டகாசம்
ஜனாதபதித் தேர்தல் 26 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் 25 ஆம் திகதி இரவு ஊருக்குள் புகுந்த காடையர்கள் பயமுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்த போதும் ஊர்மக்கள் தைரியத்துடன் செயற்பட்டதால் அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இருந்த போதிலும் எதிர்க்கட்சி பொது வேட்பாளரை அவமதிக்கும் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நடவடிக்கையில் இப்பிரதேசத்துக்குப் பொறுப்பான ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரொருவர் நேரில் கலந்து கொண்டதோடு போதையுடன் ஆயுதம் தரித்த காடையர்களும் ஈடுபட்டுள்ளனர்..
இச்சம்பவத்தின் பின்னர் ஆளும் கட்சியின் பிரபல ஆதரவாளர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அறிய வருகின்றது. ஏவ்வாறாயினும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போது ஊர்மக்கள் இவ்வாறு சச்சரவில் ஈடுபடுவது வேதனையைத் தருவதாக ஊர்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் முடிவடைந்திருக்கின்ற இந்நிலையில் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக ஆங்காங்கே ஊர்மக்கள் தயாராகி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

- January 24, 2010 by Media Voice Of Kahatowita

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கஹடோவிடவுக்கு வருகை

அல் ஹாஜ் M.U.M. ருஸ்தி அவர்களதும் மேலும் பல சிரேஷ்ட ஸ்ரீ .ல.சு.க. அங்கத்தவர்களினதும் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 2010.01.23 ஆம் திகதி கஹடோவிடவுக்கு வருகை தந்தார். ஆவரை வரவேற்பதற்காக ருஸ்தி ஹாஜியார் வீட்டில் சிறு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு வரவேற்புரை நிகழ்த்திய ருஸ்தி ஹாஜியார் இந்த சந்தர்ப்பத்தில் தம்முடைய அழைப்பை எற்று வருகை தந்த திருமதி சந்திரிகா அவர்களையும் வந்திருந்தவர்களையும் வரவேற்றார். அதன்பின்னர் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கஹட்டோவிட தனக்கு எப்போதும் மிகப்பரிச்சயமுள்ள இடம் எனவும் தான் சிறு வயது முதலே இங்கு அடிக்கடி வந்து போவதாகவும் தன்னுடைய அரசாங்க காலத்தில் பல சேவைகளை இக்கிராமத்துக்கு வழங்க முடிந்ததாகவும் பலருக்க தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததாகவும் குறிப்பிட்டார். அத்தோடு தான் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது கட்சியின் தலைமை தன்னைப் புறக்கணித்ததாகவும்இ இருந்த போதிலும் தான் கட்சியை விட்டு செல்லவோ பொது வாழ்விலிருந்து ஒதுங்கி விடவோ முடிவு செய்யவில்லை என்றும் கூறினார். ஏதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஸ்ரீ .ல.சு.கட்சியை மறு சீரமைத்து உண்மையான  தொண்டர்களிடம் கட்சியைக் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே; இத்தேர்தலில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டாh.
அதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளை கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர் அஷ்ரப் ஹஸன் தொகுத்து வழங்கினார்.
பின்னர் ஜௌஸி ஹஜியார் நன்றியுரை நிகழ்த்தினார். இறுதியாக முன்னால் ஜனாதிபதிக்கு ருஸ்தி ஹாஜியார் வீட்டில் தேனீர் விருந்தொன்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

- January 23, 2010 by Media Voice Of Kahatowita

ஸபர் மாதமும் முஸ்லிம்களும்

சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மாதம்தோறும் ஏதாவதொரு புதுமையை வணக்கம் என்ற பெயரில் நிறைவேற்றி அதன் காரணமாக நன்மையை அடைந்து விடலாம் என்றெண்ணி செய்கின்றனர். உதாரணமாக முஹர்ரம் மாதம் ஆசூரா கந்தூரி என்றும் , ஸஃபர் மாதம் வந்தால் ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதனென்றும், ரபிஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் மீலாது விழா கொண்டாட்டமென்றும், ரஜப் மாதத்தில் தலைப் பாத்திஹாவென்றும், ஷாஃபான் மாதத்தில் ஷபே பராஅத் இவைகள் போன்ற பித்அத்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.
ஆனால் இஸ்லாத்தில் ஒரு வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன.
1. இக்லாஸ் என்னும் மனத்தூய்மையுடன் செய்தல் அவசியம்
2. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எடுத்து இயம்பிய வழிமுறையில் செய்தல் அவசியம்
இவைகள் இரண்டையும் விடுத்து காலம்காலமாக செய்த செயல் என்றோ, முன்னோர்கள் செய்தவைகள் என்றோ, செய்வோமேயானால் நாளை மறுமையில் எந்த பயனும் கிடைக்காது மாறாக புதுமையை புகுத்திய குற்றத்திற்காக தண்டனையை பெற்று தரும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஆதாரமாக உள்ளது.
இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்), பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும், வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிட்டது போன்று சிறந்த வார்த்தையாகிய குர்ஆனிலும் சிறந்த நடைமுறையாகிய நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளிலும் இல்லாத ஒன்றை யார் செய்தாலும், சொன்னாலும், அங்கிகரித்தாலும் அனைத்தும் வழிகேடுகளாகும், வழிகேடான வணக்கங்கள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்க போதுமானதாகும்.
இதுபோன்ற வழிகேடுகளில் ஒன்றுதான் ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று கருதி அந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை வரை எந்தவொரு நல்ல காரியங்களையும் செய்யாமல் பிற்படுத்துவதும் அல்லது தடுப்பதுமாகும். இந்த காலங்களில் இப்படி ஏதாவது சுபநிகழ்ச்சிகளை நடைபெற செய்தால் நன்மை கிடைக்காது என்று உறுதியாக நம்பி பிற்படுத்துகின்றனர். எவ்வாறு மாற்று மதத்தில் மார்கழி மாதத்தை பீடை மாதமென்று கருதி சுப நிகழ்ச்சிகளை செய்யாமல் பிற்படுத்தியோ அல்லது முற்படுத்தியோ செய்கின்றார்களோ அதேபோன்று தூய மார்க்கமாகிய இஸ்லாத்தில் இருப்பவர்களும் மாற்று மதத்தாரை காப்பி அடிப்பதை போன்று அடிபிறழாமல் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். எந்ததளவிற்கெனில் திருமணமான புதுமண தம்பதிகளையும் ஒன்றுசேரவிடாமல் பிரித்து வைத்து பீடை கழிக்கின்றனர் எவ்வாறு மாற்று மதத்தினர்கள் மார்கழி மாத்தில் செய்கின்றார்களோ அதே போன்று.
யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களே! (நூல் அபூ தாவூது).
இந்த ஹதீதின் சாராம்சம் என்னவெனில் சமுதாயத்தின் மற்றும் நாட்டின் எண்ணிக்கையில் பெயரளவு முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வும் அவனுடைய ரசூல்(ஸல்) அவர்களும் காட்டி தந்த அழகிய வழிமுறையினை பின்பற்றி வாழ்ந்து உயர்ந்த நிலையான சொர்க்கத்திற்கு தகுதியானவர்களாக வாழாமல், மார்க்கம் அனுமதித்திருக்கின்றதா? அல்லாஹ் அங்கிகரிப்பானா? மற்றும் முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதுமோ அல்லது ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது செய்தார்களா?, சொன்னார்களா? அல்லது அங்கீகாரம் வழங்கினார்களா? என்றெல்லாம் பார்க்காமல் முன்னோர்கள் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மற்றவர்களை பார்த்து பின்பற்றி வருகின்றார்களே அவர்கள் அந்த சமுதாயத்தையே சார்ந்தவராவார் என நபி(ஸல்) அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார்கள்.
இன்னும் இந்த ஸபர் பீடையை கழிக்க அல்லது நீக்க இவர்களிடத்தில் நடைமுறையில் உள்ள செயல்கள் அனைத்தும் ஆச்சரியப்பட வைக்கின்றன. அதாவது ஸஃபர் மாதத்தின் கடைசி புதனன்று வீடுகளை சுத்தம் செய்து அந்தந்த பகுதியை சேர்ந்த ஜமாஅத் தலைவர்களின் உத்தரவின் மூலம் மா இலைகளில் அல்லது பீங்கானில் மையினால் என்னவென்றே தெரியாத மற்றும் புரியாத ஒருசில அரபி எழுத்துக்களை எழுதி அதனை எல்லா வீடுகளுக்கும் வினியோகம் செய்து எழுதப்பட்ட வார்த்தையை தண்ணீரில் கரைத்து எல்லோரும் குடித்துவிட்டு, பல்வேறு வகையான உணவு பண்டங்கள் மற்றும் பதார்த்தங்களை அன்றைய தினத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு அல்லது பார்சல் எடுத்துக் கொண்டு ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து ஆற்றங்கரைக்கோ, கடற்கரைக்கோ,  சென்று குளித்துவிட்டு நேராக அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப  தர்ஹாக்களுக்கு சென்று அருள்(?!) பெற்றுவிட்டால் ஸஃபர் மாத பீடை நீங்கும் என்ற எண்ணத்தில் இன்றும் அறியாமை கால பழக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த அனாச்சாரங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் காரணம் வினோதமானது அதாவது நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத ஆரம்பத்தில் நோய்வாய்பட்டு கடைசி புதனன்று நிவாரணம் பெற்றார்கள், நோய் ஏற்பட்ட நாட்களை பீடையென்றும் நிவாரணம் கிடைத்த நாளை பீடை போக்கிய நாளென்றும் கருதி இதுபோன்ற சடங்கு சம்பிரதாங்களை செய்து வருகின்றனர். இந்த காரணம் சரியென்றிருந்தால் அதனை அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்க வேண்டும் அல்லது அருமை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன் வாய் மொழிந்திருக்க வேண்டும். ஆனால் அதன்பிறகு நபி(ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிர் வாழ்ந்த அடுத்தடுத்த வருடங்களில் வரக்கூடிய ஸபர் மாதத்தை நான் நோயுற்று நிவாரணம் பெற்ற காரணத்திற்காக இவ்வாறு இவ்வாறாக செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கவுமில்லை. பூர்த்தி செய்யப்பட்ட மார்க்கத்தில் ஏதோ ஒருசிலர் தன்னுடைய வருமானத்திற்காக புதிதாக புகுத்தி உள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஒரு மனிதருக்கு ஏதாவது ஒரு துன்பத்தை நீக்குவோனும் மேலும் நன்மையை கொடுப்போனும் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் கிடையாது என்பதை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்
இன்னும் (நபியே) அல்லாஹ் உமக்கு ஏதாவது (ஒரு) துன்பத்தைக் கொண்டு பீடிப்பானாகில் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை (அவ்வாறே) அவன் உனக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தித் தந்தால் (அதைத் தடுத்துவிடுவோர் எவருமில்லை) அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (அல்-குர்ஆன் 6: 17).
இதுபோன்ற செயல்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டு உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணித்து வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தை பெறுவோமாக!


- January 22, 2010 by Media Voice Of Kahatowita

அல் பத்ரியாவில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

கஹடோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட.;டிகள் ஆரம்பமாகியுள்ளன. குழு நிலைப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருவதோடு ஏனைய மெய்வல்லுனர் நிகழ்ச்சிகள் அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளன.
வழமை போன்று நஜூம், கமர், ஷம்ஸ் ஆகிய இல்லங்களுக்கிடையிலேயே போட்டிகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

« old entrys
Daily hadees
------
Recent Comments