Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif
Month: December 2009
- December 30, 2009 by Media Voice Of Kahatowita

      எப்படி இருக்குது எனது தொப்பி……….

அல் பத்ரியாவில் நடைபெறுகின்ற அப்பியாசக் கொப்பி மலிவு விற்பனை - December 27, 2009 by Media Voice Of Kahatowita
அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் 2010ஆம் ஆண்டுக்கான அப்பியாசக் கொப்பிகளை மலிவு விலையில் விற்பனை செய்யும் வேலைத் திட்டம் 2009.12.25 ஆம் திகதி பி.ப. 4.00 மணியளவல் வெகு விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 26 மற்றும் 27 ஆம் திகதிகளிலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு 28ஆம் திகதி வரையும் நீடிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்; பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பத்ரியா நலன்புரிச்சங்க அங்கத்தவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியின் மூலம் ஊர் மக்கள் பெரு நன்மை அடைந்துள்ளனர். அப்பியாசக் கொப்பிகள் எங்கும் இல்லாத அளவு மலிவான விலையில் விற்கப்படுவதோடு பாடசாலையின் வண்ணப் புகைப்பாடங்களுடன் காணப்படுவத விசேட அம்சமாகும்.
புhடசாலை மாணவர்களுக்குத் தேவையான ஏனைய உபகரணங்களும்  புத்தகப் பை மற்றும் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது வசதியானக உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர். 28ஆம் திகதி இரவு 10.00 மணியுடன் நிறைவு பெறவுள்ள இந்நிகழ்ச்சிக்குப் பின்னரும் பாடசாலையில் தமக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டள்ளது.
மேலும் ஒரேயடியாக முழுப்பணத்தையும் செலுத்தி அப்பியாசக் கொப்பிகளை வாங்க முடியாதளவு பொருளாதார வசதி அற்றவர்களுக்கு கடன் அடிப்படையிலும் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

- December 27, 2009 by Media Voice Of Kahatowita

என்ன செய்யும் இந்த FUNCTION  KEYS?

கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (FUNCTION KEYS) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.
இந்த பன்ங்ஷன் விசைகள் பயன்படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதேவேளை சில விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற்படுவதோடு வேறு சில விசைகள் ALT மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு எப்லிகேசனை நிறுத்திவிட முடியும்.
விண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்ஷன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதேவேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப்படாமலும் உள்ளன.
பங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.

F1

இந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசனிலும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வரவழைக்கும். அதேவேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸ¤க்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம். எஸ். வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (TASK PANE) திறந்து கொள்ளும் அதிலிருந்து உதவிகள் பெறலாம்.

F2
விண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (RENAME) இந்த விசை பயன்படும். எம். எஸ். வர்டில் ALT + CTRL + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது OPEN டயலொக் பொக்ஸ் திறக்கும்.

F3
இதனை அழுத்தும் போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித்தரும் SEARCH விண்டோ திறந்து கொள்ளும். எம். எஸ். வர்டில் SHIFT + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (UPPER CASE ) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (LOWER CASE) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

F4
விண்டோஸில் எந்த தொழில்பாடையும் செய்வதில்லை. எம். எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும் ALT + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் ALT + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.

F5
விண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை REFRESH செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். எம். எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி FIND & REPLACE டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். எம். எஸ். பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.

F6
இண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம் CTRL + SHIFT + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக்கொள்ள

F7
எம். எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும்.

F8
இந்த இசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் முன்னர் அழுத்துவதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வரவழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (SAFE MODE) இயக்க இந்த விசையே பயன்படுத்தப்படுகிறது-

F9
இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.

F10
விண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (ACTIVATE) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வரவழைக்கலாம்.

F11
அனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.

F12
எம். எஸ். வர்டில் SAVE AS யள விண்டோவை வர வழைக்கும். அத்தோடு SHIFT + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். CTRL + SHIFT + F12 விசைகளை அழுத்தி PRINT டயலொக் பொக்ஸை வரவழைக்கும்.

விண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன்படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம் F9) எனவே இதனை சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கிவிட முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.

டெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் PROPERTIES தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்று டயலொக் பொக்ஸில் SHORTCUT டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு SHOTRCUT KEY எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஒகே செய்து விடுங்கள்.

நன்றி – தினகரன்

- December 27, 2009 by Media Voice Of Kahatowita

டென்ஷன் வேண்டாமே!

ஒரு சராசரி மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. அவன் ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் பயணம் செய்கிறது. அவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளைஅசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்த செயல்களால் அவன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் அவன் முயற்சி என்று எதுவும் இல்லை.
ஆனால் அவன் முயற்சி எடுத்து நடத்தும் சில்லறை வேலைகளால் அவன் களைத்துப் போகிறான். தளர்ச்சி அடைகிறான். டென்ஷனாகிறான். எப்போது தான் இந்த வேலைக்கெல்லாம் ஓய்வோ என்று அங்கலாய்க்கிறான். தான் வேலை செய்வது அடுத்தவருக்குத் தெரியாமல் போனால், அடுத்தவர்கள் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளா விட்டால் கோபப்படுகிறான். ‘நான் போனால் தான் என்னருமை தெரியும்’ என்று பயமுறுத்திப் பார்க்கிறான்.
இயற்கையாக நடக்கும் வேலைகளுக்கும் மனிதனாகச் செய்கிற வேலைகளுக்கும் இடையே எத்தனை வித்தையாசம் பாருங்கள். இயற்கை பிரமிக்க வைக்கும் அளவு வேலைகளை மனித உடலில் செய்ய வைத்தும் ஏற்படாத களைப்பும், டென்ஷனும் மனிதனாகச் செய்யும் அற்ப வேலைகளால் வந்து விடுகின்றனவே

அது ஏன்? ஆராய்வோமா?

இயற்கை தான் செய்யும் வேலைகளைக் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. அதனால் ஏன் தினம் செய்ய வேண்டும் என்ற கேள்வி அங்கு எழுவதில்லை. மனிதன் துரும்பை நகர்த்தினால் கூட கணக்கு வைத்துக் கொள்கிறான். (மேலே சொன்ன புள்ளி விவரத்தைப் படித்தால் படித்து முடித்தவுடனே ‘ஐயோ இந்த அளவு வேலைகள் என் உடல் செய்கிறதா?’ என்று எண்ணியே கூட களைத்துப் போகக் கூடும்). அதனால் அந்தக் கணக்கே களைப்புக்கும் டென்ஷனுக்கும் காரணமாகி விடுகிறது.
இயற்கை எதையும் எதனோடும் ஒப்பிடுவதில்லை. உதாரணமாக மூளை ‘நான் எழுபது லட்சம் செல்கள் பயன்படுத்துகிறேன். தசைகள் எழுநூற்று ஐம்பது தான் பயன்படுத்துகின்றன’ என்று ஒப்பிடுவதில்லை. ஏனிந்த அநியாயம் என்று குமுறுவதில்லை. அதனால் டென்ஷனாவதில்லை.
இயற்கை தன் செயல்களை சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே நினைக்கிறான். இயல்பாக, மகிழ்ச்சியாகச் செய்யும் எந்த செயலும் அவனுக்கு களைப்பையும் டென்ஷனையும் உண்டாக்குவதில்லை. ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சுமையாக எண்ணி புலம்பலுடன் செய்யும் செயல்கள் களைப்பையும் டென்ஷனையும் ஏற்படுத்தாமல் இருந்தால் அது தான் அதிசயம்.
இயற்கை எந்த செயலையும் அடுத்தவர் பார்வைக்காகச் செய்வதில்லை. அதனால் அது அடுத்தவர் கருத்துகளை எதிர்பார்த்து இருப்பதில்லை. அதன் செயல்களின் தரம் சிறப்பாகவும், நிலையான தன்மையுடையதாகவும் இருக்கின்றது. மனிதர்கள் பலர் அடுத்தவர் பார்க்க மாட்டார்கள் என்றால் ஒரு நல்ல செயலை செய்யவே முற்படுவதில்லை. செயல்களை செய்வதை விட அடுத்தவர்கள் கவனிக்கிறார்களா, பாராட்டுகிறார்களா, என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் நினைப்பதில் அதிக நேரமும், அதிக கவனமும் மனிதர்கள் செலவிடுவதே டென்ஷனுக்கு அடிப்படைக் காரணமாகி விடுகிறது. விளைவு, குறைவான செயல்கள் நிறையவே டென்ஷன் என்றாகி விடுகிறது.
இயற்கையின் செயல்களில் தேவையான ஒழுங்குமுறை இருக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் செயல்களில் அது இருப்பதில்லை. அவர்களுடைய தவறான மனநிலைகள் அந்த ஒழுங்கின்மைக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
இயற்கை செய்யத் தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் இயற்கை செய்து முடிக்கிறது. மனிதன் செய்கின்ற பல செயல்கள் தேவையில்லாததாகவும் அவனுக்குப் பயன் தராதவையாகவும் இருக்கின்றன. அதனால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை. எனவே மீதியுள்ள குறைவான நேரத்தில் அனைத்தையும் செய்ய முயலும் போது களைப்பும் டென்ஷனும் தோன்றுவது இயல்பேயல்லவா?
இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. செய்ய வேண்டிய செயல்களை அமைதியாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக முழுக் கவனத்தோடு செய்யும் போது நாம் ஒவ்வொரு நாளும் டென்ஷனில்லாமல், தளர்ச்சி இல்லாமல் சிறப்பாக எத்தனையோ செய்து முடிக்க முடியும். முன்பு சொன்ன இயற்கையின் செயல்களுக்கும், மனித செயல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை கவனித்தால் ஒரு பெரிய உண்மை விளங்கும். டென்ஷன் எப்போதுமே செய்கின்ற செயல்களால் இல்லை. செயல்களைப் பற்றிய எண்ணங்களாலேயும் முறைகளாலேயும் தான் ஏற்படுகின்றது.
யாரோ ஒரு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகின்றது. “பிரபஞ்சம் நொடியில் பல நட்சத்திரங்களை சத்தமில்லாமல் உருவாக்கி வருகின்றது. ஆனால் கோழி முட்டை இடுவதற்கு முன்பு போடும் சத்தம் ஊரையே தட்டி எழுப்புகிறது”.
நாம் கோழியாக இருக்க வேண்டாம். பிரபஞ்சமாக இருந்து அமைதியாக நட்சத்திரங்களை உருவாக்குவோம். மேலே குறிப்பிட்ட இயற்கையின் வழிமுறைகளைப் பின்பற்றி செயல்புரிய கற்றுக் கொண்டால் டென்ஷனே ஏற்படாது. களைத்துப் போகாமல் நாம் செய்ய முடியும் சாதனைகள் கற்பனைக்கும் அடங்காது.

மாணவர்களின் கல்வியும் பெற்றோரும் – மீள்பார்வை பிரதம ஆசிரியர் ரவுப் ஸெய்ன்(B.A) (m.Phil) உரை - December 26, 2009 by Media Voice Of Kahatowita

2009.12.25 ஆம் திகதி வெள்ளி இரவு SEDO கலாச்சார நிலையத்தில் மாணவர்களின் கல்வியும் பெற்றோரும் என்ற தலைப்பில் மீள்பார்வை பிரதம ஆசிரியர் ரவுப் ஸெய்ன்(B.A) (m.Phil) அவர்களின் உரை இடம் பெற்றது.

இந்த உரையில் மாணவர்களது கல்வியில் பெற்றோர் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பதை உதாரணங்களோடு விளக்கினார். முஸ்லிம்களின் கல்வி கடந்த கால சாதனைகளாக மட்டும் மாறி விட்டதை சுட்டிக்காடடிய அவர் கல்வி முன்னெற்றத்தில் இருக்கின்ற சவால்கள் தடைக்கற்கள் என்ன என்பதை புள்ளி விபரங்களோடு எடுத்துரைத்தார்.

இவ்வரையின் போது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி சிறந்த தெளிவு ஏற்பட்டதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீமின் நிதி ஒதக்கீட்டில் அபிவிரத்திப் பணிகள் - December 26, 2009 by Media Voice Of Kahatowita
கம்பஹ மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான சாபி ரஹீமிடம் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் கமால் அப்துல் நாஸர் மு.கா. உறுப்பினர்களான அல்ஹாஜ் M.N.M. ஜௌஸி அல்ஹாஜ் A.M.M.ஜிப்ரி மற்றும் மாகாண சபை வேட்பாளர் A.R.M. ரிஸான் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கஹட்டோவிட்டாவில் பின் வரும் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
1.    கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வத்தியாலயத்துக்கு ரூ. 100000.00 பெறுமதியான போடடோ பிரதி இயந்திரம் பெற்றுக் கொடுத்தல்
2.    கஹட்டோவிட்ட தௌஹீத் பள்ளிவாசலக்கு முன்னால் செல்லும் யால்கொடதெனிய பாதையை ரூ. 100000.00 செலவில் கொங்கிறீட் இட்டு புணரமைத்தல்

3.    கஹட்டோவிட்ட இல்மா பாலர் பாடசாலைக்கு முன்னால் செல்லும் ஓகொடபொல பாதையை ரூ. 100000.00 செலவில் கொங்கிறீட் இட்டு புணரமைத்தல்
மேற்படி அபிவிருத்தித் திட்டங்களை தனது 2009ஆம் ஆண்டுக்கான பன்மகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெற்றுத் தந்தமைக்காக பிரதேச சபை உறுப்பினர் நாஸர் மாகாண சபை உறுப்பினருக்க பிரதேச மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.

வெகு சிறப்பாக நடைபெற்ற அல் அக்பர் பாலர் கலை விழா - December 22, 2009 by Media Voice Of Kahatowita

கஹட்டோவிட்ட அல் அக்பர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா 2009.12.20 ஞாயிறு பி.ப. 2.30 மணியளவில் பாடசாலை முற்ற வெளியில் இடம் பெற்றது. சிறுவர்களது கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்த போதிலும் நிகழ்ச்சிகளை ஒழுங்காகக் கண்டு களிக்க போதுமான வசதிகள் இல்லாதிருந்ததாக அனைவரும் முனுமுனுத்ததைக் காணக் கூடியதாகவிருந்தது.
ஏவ்வாறாயினும் பயிற்றுவத்த ஆசிரியைகளையும் செயல்படுத்திய பாலர்களையும் உதவி செய்த பெற்றோர்களையும் அனைவரும் பாராட்டினர்.

தோலுடன் அப்பிள் பழம் சாப்பிடும் முன்பு இதனைக் கொஞ்சம் பாருங்கள் - December 22, 2009 by Media Voice Of Kahatowita
இப்பொழுதெல்லாம் கடைகளில்,சந்தைகளில் விற்கப்படும் அப்பிள் பழங்கள் மிகப் பளபளப்பாகவும், புதிதாகவும் காட்சியளிக்கின்றன.

எடுத்தவுடனேயே தோலுடனேயே சாப்பிட்டு விடுகிறோம்.இந்தப் படங்களைக் கொஞ்சம் பாருங்கள்.

இவை மெழுகு தடவப்பட்டவை.இந்த மெழுகுதான் பளபளப்புக்குக் காரணமாவதோடு பழம் அழுகாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்கவும் உதவுகிறது.
பற்றீரியாத் தொடர்பை விட்டும் பழத்தைப் பாதுகாக்கவே இம்மெழுகு தடவப்படுவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றார்கள்.எனினும் இவை உடலுக்குத் தீங்கானவை தானே..!
அப்பிள் பழம் மட்டும்தான் என்றில்லை.நிறையப் பழங்களில் இந்த நடவடிக்கை உள்ளன.எனவே சாப்பிட முன்பு ஒரு கணம் சிந்திப்போம். முடிந்தால் தோல் நீக்கி உண்போம்.

தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள் - December 20, 2009 by Media Voice Of Kahatowita

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொழுகையில் வரிசையில் நிற்பதற்கான ஒழுங்குகளில் பின்னுள்ளவைகளை பேணுதல் அவசியமாகும்.
1. முன் வரிசையின் சிறப்புகள்
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
6. பெண்கள் நிற்கும் வரிசை
1. தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு
மக்கள் பாங்கிலும்இ முன் ஸஃப்பிலும் உள்ள சிறப்புகளை அறிந்து, பிறகு அவ்விரண்டும் குலுக்கல் மூலம் தான் பெறமுடியுமென்றிருந்தால் (அவர்கள் அதற்கும் தயாராகி) குலுக்கல் மூலம் அவைகளைப் பெற்றுக் கொள்வர் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் அணிவகுப்பது போல், தொழுகையில் நீங்கள் அணிவகுக்கக் கூடாதா? எனக் கூறினார்கள். அப்பொழுது நாங்கள் யாரஸுலுல்லாஹ் மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் எவ்வாறு அணிவகுக்குகிறார்கள்? எனக் கேட்டோம். அதற்கவர்கள், அவர்கள் முந்திய ஸஃப்புகளை முழுமைப் படுத்துகிறார்கள், ஸஃப்பில் நெருக்கமாக இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
விளக்கம்: இவ்விரண்டு ஹதீதின் மூலம் முன் வரிசையில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும். ஆகவே முடிந்த அளவு முன்வரிசையில் தொழ அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள். பிறகு கூறுவார்கள்,நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுப் போகும். (ஸஃப்பில்) என்னையடுத்து அறிவிற் சிறந்தோர் நிற்கட்டும். பின்னர், அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும், பின்னர் அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும். (முஸ்லிம்)
உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர் செய்வது தொழுகையை நிலைநாட்டும் விஷயங்களில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களின் ஸஃப்புகளைச் சீராக்குங்கள்! நன்றாக நெருங்கி நில்லுங்கள், நிச்சயமாக நான் என் முதுகுக்கு பின்னால் உங்களைப் பார்க்கிறேன். (இது புகாரியின் வாசகமும், முஸ்லிமின் கருத்துமாகும்)
புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில் நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம் தோள்பட்டையை அருகிலுள்ளவரின் தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நீங்கள் உங்கள் ஸப்புகளைச் சீராக்கி கொள்ளூங்கள் இல்லையெனில் அல்லாஹுதஆலா உங்கள் முகங்களுக்கிடையில் (உங்களுக்கிடையில்) வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்:. (புகாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: நாங்கள் புரிந்து கொண்டு சரியாக நிற்கிறோம் என்பதை பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்புகளை சீர்படுத்துவது போல் எங்கள் ஸஃப்புகளைச் சீர்படுத்துவார்கள். பின்பு ஒரு நாள் அவர்கள் தொழுகைக்காக வீட்டிலிருந்து வந்தார்கள். (தொழுகையை ஆரம்பிக்க) தக்பீர் சொல்ல நெருங்கிவிட்டார்கள். அப்பொழுது ஒருவர் ஸஃப்பை விட்டு தம் நெஞ்சை வெளிப்படுத்தி (ஸஃப்பை விட்டு சற்று முன்னால்) நிற்பதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் ஸஃப்புகளை சீராக்கிக் கொள்ளுங்கள் அவ்வாறு இல்லையெனில் அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் பிளவையும், வேறுபாட்டையும் ஏற்படுத்தி விடுவான் என எச்சரித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஸஃப்பின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குப் புகுந்து செல்வார்கள். எங்கள் நெஞ்சுகளையும் தோள்பட்டைகளையும் தடவி விடுவார்கள். அப்பொழுது கூறுவார்கள்: (ஸஃப்பில்) நீங்கள் வேறு படாதீர்கள் அவ்வாறு நீங்கள் வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டு விடும். மேலும் அவர்கள் கூறுவார்கள்இ நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் முந்திய ஸப்புகளில் உள்ளவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். (அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள்: அல்லாஹ்,அவர்கள் மீது தன் அருள்களைப் பொழிகிறான் என்பதாகும். மலக்குகள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதின் பொருள், மலக்குகள் அவர்களுக்காக துஆச் செய்கின்றனர் என்பதாகும்) (அபூதாவூது)
விளக்கம்: தொழுகையில் வரிசையில் நிற்கும் போது நெருக்கமாகவும் நேராகவும் நிற்க வேண்டும். நெருக்கமாக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்தில் உள்ளவர்களின் தோள்புயத்துடன் நமது தோள்புயமும் கால் பாதத்துடன் கால் பாதமும் சேர்ந்திருக்க வேண்டும். நேராக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்திலுள்ளவர்களின் கணுக்காலுடன் நமது கணுக்கால் சேர்ந்திருக்க வேண்டும். விரல் நுனிகளை வைத்து நேர் பார்க்கக்கூடாது. நமது காலை பக்கத்திலுள்ளவர்களின் காலுடன் சேர்க்கும்போது மிருதுவைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோவினை ஏற்படும் அளவிற்கு கடினத்தை கைவிட வேண்டும். பின்வரும் ஹதீது அதை தெளிவுபடுத்துகின்றது.
உங்கள் ஸஃப்புகளை நேராக நிலை நாட்டுங்கள். உங்கள் தோள் பட்டைகளுக்கு நேர் படுங்கள், இடைவெளிகளை நிரப்புங்கள். உங்கள் சகோதரர்களின் கரங்களுடன் மென்மையைக் கடைபிடியுங்கள். ஷைத்தானிற்காக இடைவெளியை விட்டு விடாதீர்கள். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது)
இந்த ஹதீதில், தொழுகையில் வரிசையில் இடைவெளி விடுவதுபற்றி கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் இன்னும் இது விஷயத்தில் மக்கள் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபற்றி அறியாமையில் உள்ள மக்களுக்கு பக்கத்தில் தொழும் போது பல சிரமங்களையும் நாம் எதிர் நோக்கின்றோம், அவர்களின் கால் பாதத்துடன் நமது கால் பாதத்தை சேர்க்க முனையும் போது அவர்கள் ஏதோ அது ஒரு பாவகரமான செயல் போன்று நினைத்து, அவர்கள் நம்மை விட்டும் வெகு தூரம் நகர்ந்து விடுகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், இச்சுன்னாவை நினைவில் வைத்து இனிமேலாவது இதை செயல் படுத்த முன்வர வேண்டும். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் இப்படிப்பட்டவர்கள் ஞாபகம் வைத்து கொள்ளட்டும்.
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
நீங்கள் உங்களின் வரிசைகளை நெருக்கமாகவும் சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள், கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள், என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக, வரிசையின் இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டியின் தோற்றத்தில் ஷைத்தான் நுழைகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
விளக்கம்: வரிசையில் இடைவெளி விட்டு நின்றால் அங்கே ஷைத்தான் கருப்பு ஆட்டுகுட்டி உருவத்தில் நுழைந்து நமது உள்ளங்களில் பல எண்ணங்களை உண்டுபண்ணி நமது தொழுகைகளை பாழாக்கிவிடுவான், ஆகவே வரிசைகளில் இடைவெளி விடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். ஸஃப்பில் குறை இருக்குமாயின் அது கடைசி ஸப்பாக இருக்கட்டும். (அபூதாவூது)
விளக்கம்: முன் உள்ள வரிசையில் இடம் இருக்கும் போது அடுத்த வரிசையை ஆரம்பிக்கக் கூடாது, முன்வரிசையை முழுமை படுத்திய பின்பே அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும். இன்று சில பள்ளிகளில், தொழுகை முடிந்துதும் பள்ளியை விட்டும் புறப்பட்டு விட வேண்டும் என்பதற்காக அல்லது மின்விசிறிக்குக் கீழ் நிற்க வேண்டும் அல்லது எயர் கண்டிஸனுக்கு நேராக நிற்க வேண்டும் என்பதற்காக அல்லது இதுபோன்ற பல காரணங்களுக்காக முன் வரிசையில் இடமிருந்தும் தன் சுயநலத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஓர் இடத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்கின்றார்கள். இது முற்றிலும் சுன்னாவிற்கு மாற்றமான முறையும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டியவையுமாகும். இப்படி நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச் செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில் இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)
இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து இரவு தொழுகை தொழுவதற்காக அவர்களின் இடது பக்கம் எழுந்து நின்றேன். பின்பக்கமாக என் தலையை நபி (ஸல்) அவர்கள் பிடித்து அவர்களின் வலது பக்கத்திலே என்னை நிறுத்தினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)
6. பெண்கள் நிற்கும் வரிசை
நானும் ஒரு அனாதையும் எங்களின் வீட்டிலே நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (இரவுத் தொழுகை) தொழுதோம், என் தாய் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் எங்களுக்கு பின் நின்றுதொழுதார்கள். (புகாரி)
விளக்கம்: மேல்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து பல சட்டங்களை நாம் விளங்கலாம், இருவர் ஜமாஅத்தாக தொழுதால் மஃமூமாக நிற்பவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்க வேண்டும். இரண்டாவது நபர் வந்து விட்டால் இவர் இமாமுக்கு பின்பக்கமாக சென்று அவ்விருவரும் இமாமுடைனய வலது இலது பக்கத்தில் நிற்க வேண்டும். அதன் பின் வருபவர்கள் வலது இடது பக்கமாக நிற்க வேண்டும். மஃமூம்கள் இருவராக இருந்து ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாக இருந்தால், ஆண் இமாமின் வலது பக்கத்திலும் பெண் பின் வரிசையிலும் தனியாக நிற்க வேண்டும். அந்தப் பெண் தனது தாயாக, மகளாக, மனைவியாக இருந்தாலும் சரியே. பெண்களுக்கு சிறந்த வரிசை பின் வரிசையாகும். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.
தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
ஆகவே, தொழுகையில் வரிசையில் நிற்கும் விஷயத்தில் மேல் கூறப்பட்ட விஷயங்களை முழுமையாக பின்பற்ற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானக!

நன்றி: www.islamkalvi.com

உறவுகளை உரசிப்பார்க்கும் தங்கம் - December 18, 2009 by Media Voice Of Kahatowita

நடுத்தர வர்க்கத்தை ஆட்டிப்படைகிறது தங்கம். அதன் விலையேற்றம் பல பெண்களின் திருமணத்தை நிறத்தியிருக்கிறது, தாமதப்படுத்தியிருக்கிறது. திருமணமான பல பெண்களை புகுந்த வீட்டிலிருந்து விரட்டியடித்திருக்கிறது.
மாப்பிள்ளையாக தங்கத்தை பார்த்து மகிழும் ஆண் – ஒரு பெண்ணின் தந்தையாக – சகோதரனாக இருக்கும் போது தங்கத்தை பார்த்து பயந்து நடுங்குகிறான்.
ஆம்,பெண் – ஆண் என்ற வேறுபாடு இல்லாமல் மனிதர்களின் மூலையை பெருமளவில் ஆக்கிரமித்திருக்கிற ஒரே உலோகம் தங்கம் தான். இது ஆட்டுகிற பேயட்டத்திற்கு நம் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருமே ஆடத்தான் செய்கிறார்கள்.
காரணம், ‘சொத்து’ என்ற வடிவத்துக்கு வீடு, நிலம் போக பெரிய பங்காற்றுவது தங்கம் தான். தங்கம் பணத்தின் மதிப்பைப் பெற்றதால் அது மனிதர்களின் உறவை முடிவுசெய்கிறது. அவர்களின் மகிழ்ச்சியை, துன்பத்தைத் தீர்மானிக்கிற உலோகமாக தங்கம் உருமாறியிருக்கிறது.
சில நேரங்களில் அது மனிதர்களை அற்பமானவர்களாகவும் மாற்றிவிடுகிறது.
‘தங்கள் உறவை விட தங்கம்தான் உயர்ந்தது’ என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி, உறவுகளைப் பகையாக்கி, நட்பை விரோதமாக்கி, மனிதர்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறிது தங்கம்.
‘தங்கம் தனக்கு பாதுகாப்பு’ என்ற நிலையில் ஆரம்பித்து ‘தங்கமே தனக்கு பகையாக மாறிய கதைகளும் ஏராளம்.
தங்கத்தை பறிப்பதற்காக உயர்த்தப்பட்ட வாள், உயிரை பறித்தாள் தான் தங்கம் கைக்கு வரும்’ என்ற நிலையில், உலகெங்கிலும் பல போர்களை நடத்திருக்கிறது.
வரலாற்றில் வாளுக்கும், தங்கத்திற்கும் நடந்த இந்தச் சண்டையை புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் புஷ்கின் தன் கவிதையில் இப் படிக் குறிப்பிடுகிறார்.
‘‘எல்லாம் என்னுடையது’’ என்றது தங்கம்.
‘‘எல்லாம் என்னுடையது’’ என்றது வாள்.
‘‘என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’’ என்றது தங்கம்.
‘‘என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’’ என்றது வாள்.

ஆம், மன்னர் காலத்தில் இருந்து இன்றைய ஜனநாயக காலம் வரை போரில் வெற்றி பெற்ற நாடு, தோல்வியடைந்த நாட்டில் புகுந்து குறி வைத்து சூறையாடியது தங்கத்தைதான். தங்கம் எந்த நாட்டில் அதிகம் இருக்கிறதோ, அந்த நாட்டை நோக்கி படையை நகர்த்துவது வலுத்த நாட்டினர் வழக்கம்.
இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கஜினி முகமது, ‘ இந்து கோயிலுககுள் புகுந்தார்’ என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. உண்மையில் அவர் நோக்கம் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பதல்ல. இந்தியாவில் பெருமளவிலான தங்கம் கோயிலுக்குள் இருந்ததே காரணம். இந்தியாவின் இந்து மன்னர்கள் கூட இன்னொரு இந்து நாட்டின் மீது படையெடுத்து சென்றபோது, அந்த ஊர் கோயிலுக்குள் புகுந்து தங்க நகைகளை சூறையாடி இருக்கிறார்கள் என்பது வரலாறு.
இப்போதுகூட, தனிநபர்களின் பெரும்பான்மையான கொலைகளுக்கு மதம், ஜாதி, உறவு என்ற நிலைகளை எல்லாம் தாண்டி, தங்கமே அந்தக் கொலைகளை செய்திருக்கிறது.
தங்கம் மஞ்சள் நிறத்தில் மினுமினுப்பாக இருந்தாலும் வரலாற்றில் அதன் நிறம் ரத்தக் கறை படிந்தே கிடக்கிறது. தங்ம் மனித உறவுகளை சிதைத்து, ரத்தக்களறியை ஏற்படுத்தியதை மனதில் கொண்டு, தலைவர் லெனின் 1921 ஆம் ஆண்டு இப்படிச் சொன்னார்:
‘‘உலகளவில் நாம் வெற்றி பெற்ற பின்னர்,உலகத்தின் மிகப் பெரும் நகரங்களில் சிலவற்றின் தெருக்களில் பொதுக் கழிப்பிடங்களைக் கட்டுவதற்கு தங்கத்தை பயன்படுத்துவோம் என நினைக்கிறேன். 1914-18ம் வருடங்களில் நடைபெற்ற யுத்தத்தில் தங்கத்துக்காக பத்து மில்லியன் மக்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்? முப்பது மில்லியன் மக்கள் எப்படி ஊனப்படுத்தப்பட்டார்கள் என்பதை இன்னும் மறந்துவிடாத தலைமுறைக்கு மிக ‘நியாயமான’ முறையில் மிகவும் அறிவுட்டுகிற வகையில் தங்கத்தை பயன்படுத்துவது..’’
ஆம், தங்கம இன்றைய மனிதர்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொருளாக மாறியிருக்கிறது. பணம் கொடுத்து தங்கம் வாங்குங்கள். அதைப் பத்திரமாக பாதுகாத்தும் வையுங்கள்.
தங்கமா? மனிதமா? என்று வரும்போது, மனிதர்கள் பக்கம் நில்லுங்கள்.
தங்கத்தை விட மட்டுமல்ல, எந்த உலோகததை விடவும் உயர்ந்தவர்கள மனிதர்கள்.

« old entrys
Daily hadees
------
Recent Comments