Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif

Category: ஊர் செய்திகள்

அல் ஹிதாயா நிறுவனத்தால் பேரீச்சம் பழம் வினியோகம்.- முஹியித்தீன் பள்ளி நிர்வாகம் ஏற்க மறுப்பு - August 31, 2010 by MediaVoice

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கொழும்பு அல்ஹிதாயா நிறுவனத்தினால் ஊர் ஜமாஅத்தினருக்கு வினியோகிப்பதற்காக  மௌலவி M.A.M. அலவி அவர்களிடம் ஒரு தொகை பேரீச்சம் பழங்களை வழங்கியிருந்தது. ஊரில் உள்ள மூன்று ஜூம்ஆப் பள்ளிகளுக்கும் இந்த பேரீச்சம் பழங்களை வழங்கி ஜமாஅத்தார்களுக்கு வினியோகிக்க அவர் தீர்மானித்து நிர்வாகிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் முஹியித்தீன் பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது.

ஏனைய இரண்டு பள்ளிவாசல்களும் அவற்றைப் பெற்று ஜமாஅத்தார்களிடையே பங்கீடு செய்தமை குறிப்படத் தக்கது. மறுத்ததற்கான காரணத்தை நாம் அறிய முயற்சித்த போதிலும் பொறுப்பானவர்களிடமிருந்து தெளிவான பதில் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இவ்வாறு மறுக்கப்பட்ட 200 கிலோ பேரீச்சம் பழம் வேறு பிரதேசத்க்கு அனுப்பப் பட்டதாகவும் தகவல்

பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சம்பந்தமான கூட்டம் - August 25, 2010 by MediaVoice

கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி சம்பந்தமான பொதுக் கூட்டமொன்று நேற்று (24.08.2010) காலை 10.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. மாணவிகள் தனியாக கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்ற அதிபரும் பாடசாலை நலன் விரும்பிகளும் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்திற்கு ஊர் மக்கள் அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுத்திருந்த போதிலும் சொற்பமான தொகையினரே கலந்து கொண்டனர்.

இங்கு பாடசாலையின் கல்வி அபிவிருத்தி மற்றும் பௌதீக வள அபிவிருத்தி என்பன பற்றி கலந்துரையாடப்பட்டதோடு பாடசாலைக்கு காணி வாங்குவதற்கான வசூலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேல் மாகாண முதலமைச்சர் வாக்களிந்திருந்த மூன்று மாடிக் கட்டடத்தின் முதற்கட்ட நிர்மாணத்திற்காக 45 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதை நிர்மாணிப்பதற்கு உடனடியாக காணியைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதனால் ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தது 1500 ரூபா வழங்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

முற்பணம் கொடுப்பதற்காக பாடசாலையின் அயலவரால் பெற்றுக் கொள்ளப்பட்ட பாடசாலைக்குச் சொந்தமான 4 பேர்ச் காணிக்குப் பகரமாக வழங்கப்படவுள்ள பணத்தினை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காணி வாங்குவதற்காக சில பெண்கள் தாம் அணிந்திருந்த நகைகளை அன்பளிப்பாக வழங்கியமையும் குறிப்படத்தக்கது.

புனித அல்குர்ஆனின் அடிப்படையிலான வாழ்க்கையே மிகச்சிறந்த வாழ்க்கை – கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளன அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி தெரிவிப்பு AUG 9, 2010 - August 14, 2010 by MediaVoice
கடந்த பல மாதங்களாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளனம் நேற்று (2010.08.08) அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீரங்குல பொலிஸ் நிலைய சார்ஜன்ட் திரு. ஆரியரத்ன அவர்கள் புனித அல்குர்ஆனின் அடிப்படையிலான வாழ்க்கையே மிகச்சிறந்த வாழ்க்கை எனக் குறிப்பட்டார். உலகில் வாழ்கின்ற மக்களில் தாம் ஏற்றுக் கொண்ட மதத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படுகின்றவர்களில் அதிகமான விகிதாசாரத்தினர் முஸ்லிம்களே. அறியாமைக்கால அரேபியாவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பல தெய்வ வழிபாடு கோத்திர வெறி கொலை கொள்ளை உள்ளிட்ட பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் பார்த்த முஹம்மத் நபியவர்கள் அவை பற்றி கவலை கொண்டவர்களாக குகையொன்றினுள் தன்னந்தனியாக இருந்து சிந்தித்தவர்களாக இருந்தார்கள். உலக மக்களுக்கு நேரான வழியைக் காட்டுவதறகாக முஹம்மத் நபியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து புனித குர்ஆனை ஜிப்ரீல் (அலை) மூலமாக வழங்கினான். அந்த புனித வேதத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் அடங்கியுள்ளன. அதற்கு இணையாக உலகில் எந்தப் புத்தகமும் கிடையாது. ஏவ்வளவு பெரிய பேரரிஞராக இருப்பினும் இது போன்ற வழிகாட்டலை வழங்க முடியாது. அதிலே கடவுளை வணங்க வேண்டிய முறை உணவு உட்கொள்ள வேண்டிய முறை குடும்பம் நடத்துகின்ற முறை பணம் சம்பாதிக்கின்ற முறை என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விடயங்களும் அமைந்துள்ளன. இந்த சம்மேளன அறிமுகம் பற்றி முன்னால் பேசிய சகோதரர் குறிப்பிட்ட விடயங்கள் கவலை அளிக்கின்றது. தீய செயல்களின் பக்கமும் ஒழுக்கயீனங்களின் பக்கமும் முஸ்லிம்கள் செல்கின்ற நிலை பற்றி அவர் குறிப்பிட்டார். இவ்வளவு அற்புதமான ஒரு வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டு இவ்வாறான நிலைக்க முஸ்லிம்கள் செல்வது கவலையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது என்றார். கலாநிதி நபீஸ அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.
நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகளும் கம்பஹா உதவித் தேர்தல் அணையாளர் ஜனாப் மொஹமட்அவர்களும் இங்கு உரையாற்றியதோடு சம்மேளனம் பற்றிய சுருக்கமான அறிமுக உரையை சகோதரர் ஜவ்ஸி நிகழ்த்தினார். பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் ஊர் ஜமாஅத்தார்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஏற்பாட்டாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பார்க்கும் போது பங்கு பற்றியோரின் தொகை திருப்திப்படக் கூடியதாக இருக்கவில்லை. எவ்வாறாயினும் இந்த ஆரம்பம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிய பயணமாக அமைய நாம் பிரார்த்திக்கின்றோம்

கடந்த பல மாதங்களாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளனம் நேற்று (2010.08.08) அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது.  இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீரங்குல பொலிஸ் நிலைய சார்ஜன்ட் திரு. ஆரியரத்ன அவர்கள் புனித அல்குர்ஆனின் அடிப்படையிலான வாழ்க்கையே மிகச்சிறந்த வாழ்க்கை எனக் குறிப்பட்டார். உலகில் வாழ்கின்ற மக்களில் தாம் ஏற்றுக் கொண்ட மதத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படுகின்றவர்களில் அதிகமான விகிதாசாரத்தினர் முஸ்லிம்களே. அறியாமைக்கால அரேபியாவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பல தெய்வ வழிபாடு கோத்திர வெறி கொலை கொள்ளை உள்ளிட்ட பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் பார்த்த முஹம்மத் நபியவர்கள் அவை பற்றி கவலை கொண்டவர்களாக குகையொன்றினுள் தன்னந்தனியாக இருந்து சிந்தித்தவர்களாக இருந்தார்கள். உலக மக்களுக்கு நேரான வழியைக் காட்டுவதறகாக முஹம்மத் நபியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து புனித குர்ஆனை ஜிப்ரீல் (அலை) மூலமாக வழங்கினான். அந்த புனித வேதத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் அடங்கியுள்ளன. அதற்கு இணையாக உலகில் எந்தப் புத்தகமும் கிடையாது. ஏவ்வளவு பெரிய பேரரிஞராக இருப்பினும் இது போன்ற வழிகாட்டலை வழங்க முடியாது. அதிலே கடவுளை வணங்க வேண்டிய முறை உணவு உட்கொள்ள வேண்டிய முறை குடும்பம் நடத்துகின்ற முறை பணம் சம்பாதிக்கின்ற முறை என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விடயங்களும் அமைந்துள்ளன. இந்த சம்மேளன அறிமுகம் பற்றி முன்னால் பேசிய சகோதரர் குறிப்பிட்ட விடயங்கள் கவலை அளிக்கின்றது. தீய செயல்களின் பக்கமும் ஒழுக்கயீனங்களின் பக்கமும் முஸ்லிம்கள் செல்கின்ற நிலை பற்றி அவர் குறிப்பிட்டார். இவ்வளவு அற்புதமான ஒரு வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டு இவ்வாறான நிலைக்க முஸ்லிம்கள் செல்வது கவலையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது என்றார். கலாநிதி நபீஸ அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.

நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகளும் கம்பஹா உதவித் தேர்தல் அணையாளர் ஜனாப் மொஹமட்அவர்களும் இங்கு உரையாற்றியதோடு சம்மேளனம் பற்றிய சுருக்கமான அறிமுக உரையை சகோதரர் ஜவ்ஸி நிகழ்த்தினார். பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் ஊர் ஜமாஅத்தார்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  ஏற்பாட்டாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பார்க்கும் போது பங்கு பற்றியோரின் தொகை திருப்திப்படக் கூடியதாக இருக்கவில்லை.எவ்வாறாயினும் இந்த ஆரம்பம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிய பயணமாக அமைய நாம் பிரார்த்திக்கின்றோம்

பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக் கூட்டம் - July 14, 2010 by Media Voice Of Kahatowita
கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 2010.07.25 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிபர் புஹாரி உடயார் தலைமையில் நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பாடசாலையின் அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டம் கூட்டப்படாமல் இருந்த அதே வேளை புதிய அதிபர் நியமனம் பெற்ற பின்னர் பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பெற்றோர்களில் சிலரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் பாடசாலையை ஒரு ஸ்திர நிலைக்குக் கொண்டு வரும் வரை காலதாமதம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
நிர்வாகக்குழுக் கூட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பெற்றோரதும் பொது மக்களதும் அதிகளவு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் - July 5, 2010 by Media Voice Of Kahatowita
வேகமாகப் பரவி வருகின்ற டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தனகல்ல பிரதேச செயலகம் மூலமாக தரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் கஹடோவிடவில் உள்ள இரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வசிக்கின்ற மக்களை அறிவுறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டள்ளது. வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதோடு நீர் நிரம்பி நிற்கக் கூடிய அனைத்து பொருட்களையும் அப்புறப்படத்தமாறு பள்ளிவாசல்களுடாக கிராம சேவை அலுவலர்கள் மக்களுக்கான அறிவித்தல்களை விடுத்தள்ளதோடு அதிகாரிகள் இவற்றைப் பரீட்சிக்க வருவதாகவம் அறிவித்துள்ளனர்.
சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு குற்றப்பணமும் அறவிடப்படும் எனவம் தெரிவிக்கப்படுகின்றது.
ஊர் மக்கள் அனைவரும் இந்த நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் துன்பங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.
369 கஹடோவிட கிராம சேவகர் பிரிவுக்கு கிராம சேவை அலுவலராக ஜனாப் M.H.M. ஜவுபர் மீண்டும் நியமனம் - July 5, 2010 by Media Voice Of Kahatowita
இல. 369 கஹடோவிட கிராம சேவகர் பிரிவுக்கு கிராம சேவை அலுவலராக ஜனாப் M.H.M. ஜவுபர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக சிங்கள மொழியில் மாத்திரம் சேவையாற்றுகின்ற கிராம சேவை அலுவலர்களே கடமையாற்றியதால் தமது தேவைகளை நிறைவேற்றுவதில் ஊர் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அதற்கு தீர்வாக தமிழ் மொழி மூல அலுவலர் நியமிக்கப்பட்டிருந்த போதும் அவருக்கு சிங்கள மொழியில் பரிச்சயமில்லாதிருந்ததால் உரிய பயன் மக்களுக்குகக் கடைக்காத நிலையே காணப்பட்டது. ஏற்கனவே கடமையாற்றிய மன்னாரைச் சேர்ந்த ஜனாப் அப்துல் ரவூப் அவர்கள் யுத்தம் முடிவுக்குக் கொண்ட வரப்பட்டதால் மன்னாருக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஜனாப் M.H.M. ஜவுபர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் இவர் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பதாலும் ஊரைச் சேர்ந்தவராக இருப்பதாலும் மக்களது தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
இவர் எற்கனவே பல ஆண்டுகளாக இப்பிரிவில் சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓற்றுமை என்பது வஹியின் அடிப்படையில் மட்டுமே – குத்பா உரையில் மௌலவி நஸ்ரி - June 28, 2010 by Media Voice Of Kahatowita
இன்று பொதுவாக எல்லா இடங்களிலும் ஒற்றுமை பற்றி பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களிடையே ஒற்றுமை இல்லையே என்ற ஆதங்கம் சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் இருந்து வருவதோடு அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டுமென்ற ஆசையும் நம்மில் பெரும்பாலானவர்களிடம் காணப்படுவதையும் காண முடிகின்றது. உலகில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக ஒரே தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரள வெண்டும் என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு. ஆனால் கலிமாச் சொல்லி அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையுளும் ஏற்றுக் கொண்ட சமூகம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டு பிணக்குகளிலும் சச்சரவுகளிலும் சிக்குண்டு வாழ்வதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஒற்றுமை என்ற கோட்பாட்டை அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் வழிகாட்டலில் விளங்காமல் மனோ இச்சைப்படி ஒற்றுமைக்கு விளக்கம் தேடிக்கொண்டு அதனைச் செயற்படுத்த முற்பட்டமையே என்று மஸ்ஜித் ஜாமிஃ பள்ளிவாசலில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற குத்பா உரையின் போது மௌலவி நஸ்ரி குறிப்பிட்டார்.
 
ஓற்றுமையாக வாழ்வதன் அவசியம் பற்றிக் குறிப்பிட்ட இஸ்லாம் அந்த ஒற்றுமை எந்த அடிப்படையில் இருக்க வேண்டுமென்பது பற்றியும் மிகத்தெளிவாகக் குறிப்பிடுகின்றது. மனிதர்களின் மனதில் தோன்றுகின்ற சிந்தனைகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஒற்றுமைக்கு விளக்கமளித்ததோடு அல்லாஹ்வும் அவனது தூதரும் தந்த விளக்கத்தை மறந்து விட்டு விட்டமையே ஒற்றுமை சீர்குலைந்ததற்குப் பிரதான காரணமாகும்.
 
இன்று இஸ்லாத்தின் தூண்களான ஐந்து கடமைகளையும் விட சமுதாய ஒற்றுமை தான் முதன்மை வகிக்கின்றது என்ற விதத்தில் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குர்ஆனுக்கும் ஹதிஸ_க்கும் முரணாக தமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொண்ட மக்களில் பலர் இந்தக் கருத்தை ஏற்று அவரவருடைய செயற்பாடுகளை அவரவருக்குத் தேவையான விதத்தில் செய்து கொண்டு ஒற்றுமையாக இருப்பதோடு, மற்றவர்கள் இஸ்லாம் என்ற பெயரால் செய்கின்ற செயற்பாடுகள் பிழையாக இருப்பினும் அவை பிழையானவை என்பதை சுட்டிக்காட்டாமல் இருப்பதன் மூலமே இந்ந சமுதாய ஒற்றுமையை சீர்குழைக்காமல் இருக்க முடியுமென்று கூறி வருகின்றனர்.
 
ஆனால் நமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை இது தானா?
“ஒரு தவறைக் கண்டால் கையால் தடுக்கவும் அதற்கு சக்தியில்லையென்றால் வாயால் தடுக்கவும் அதற்கும் சக்தியற்றவனாக இருந்தால் குறிப்பட்ட தவறை வெறுத்து ஒதுங்கிச் செல்லவும் இது ஈமானின் இறுதிநிலை” என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதை இவர்கள்  கவனிக்க மாட்டார்களா?.
 
இன்று ஒரு பிரிவினர் மார்க்கத்தை “உசூல்” ( அடிப்படை அம்சங்கள்) என்றும் “புரூஹ்” (கிளை அம்சங்கள்) என்றும் இரு பிரிவுகளாகப் பிரித்து வைத்தள்ளனர். ஊசூரில் மாற்றுக் கருத்து முன்வைக்கப்பட்டால் அதனை எதிர்ப்பதில் தவறில்லை என்றும் புரூஹ் இல் மாற்றுக்கருத்து முன்வைக்கப்பட்டால் அவற்றை சமுதாய ஒற்றுமை கருதி தட்டிக் கேட்கவோ சுட்டிக்காட்டவோ கூடாது என்றும் ஒரு கருத்தைப்பரப்பி வருகின்றனர்.
உதாரணமாக தொழுகை இல்லையென்றோ அல்லது தொழுகையின் வக்துகளை/ரக்அத்துகளை கூட்டியோ குறைத்தோ யாராவது கருத்துக்களை வெளியிட்டால் அவற்றை எதிர்ப்பதில் தவறில்லை ஆனால் தொழுகின்ற முறையில் அதாவது தக்பீர் கட்டுதல் ருகூஉ,ஸ_ஜூது, அத்தஹிய்யாத்து முறைகள் அல்லது அந்த இடங்களில் ஓத வேண்டிய விடயங்களில் நபிகளாருக்கு யாராவத மாற்றம் செய்தாலும் யாரும் சுட்டிக்காட்டவோ எதிர்க்கவோ கூடாது. அதனால் சமுதாய ஒற்றுமை சிதைந்து விடும் என்பது இவர்களது கருத்து. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கற்றுக் கொடுத்த சில விடயங்களில் ஒத்த கருத்துள்ள வேறு சொற்களைப் பயன்படுத்தியதற்காக ஸஹாபாக்களைக் கண்டித்து திருத்திய பல சம்பவங்கள் ஹதீஸ்களிலே இடம் பெற்றிருக்கின்றன. இவ்வாறிருக்கும் போது நபிகளாரின் செயல்களுக்கு முற்றுமுழுதாக மாற்றம் செய்யும் போது சமுதாய ஒற்றுமை கருதி மௌனமாக இருப்பதற்கு இவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள் என்பதைச் சிந்திக்க வெண்டும்.
 
இவர்கள் நபிகளாரின் வாக்கப்படி கையாலோ நாவினாலொ தீமைகளைத் தடுப்பதில்லை. நபிகளாரின் போதனைக்கு மாற்றமான செயல்கள் நடைபெறுகின்ற இடங்களில் அவர்களோடு சேர்ந்து சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பதையும் பல சந்தர்ப்பங்களில் இவர்களும் சேர்ந்து ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது. கேட்டால் அவை பிழையான விடயங்கள் தான். ஏன்றாலும் சமுதாய ஒற்றுமை கருதி கொஞ்சம் நளினமாக அவர்களுடன் இணைந்து கொண்டோம் என்று கூறுகிறார்கள். நபிகளார் சொன்ன இறுதிக்கட்டமான மனதால் வெறுக்குமாறு ஏவிய விடயத்தைக்கூட ஒற்றுமை கருதி விட்டு விடுகின்றனர்.
 
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்தவை மாத்திரம் தான் மார்க்கம். அவற்றுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பது தான் ஒரு முஸ்லிமின் கடமை. மாற்றமான விடயங்களைச் செய்யாமல் இருப்பதும் அவற்றைச் செய்பவர்களிடம் அவை பிழை என்பதைச் சுட்டிக்காட்டுவதும் அவற்றைத் தடுக்க முயற்சிப்பதுமே நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை என்பதை உணர்ந்து அதனடிப்படையில் செயற்படுவதன் மூலம் மாத்திரமே இஸ்லாம் காட்டிய ஒற்றுமையை யதார்த்தமாக்க முடியும். மாற்றமாக மனோ இச்சையின் அடிப்படையில் யார் யாரோ தீர்;மானித்த கருத்துகளை ஒதக்கி விட்டு உண்மையான முஃமின்களாக வாழ்ந்து மகத்தான சுவர்க்கத்தை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக.
இன்று உலக இரத்த தானம் செய்வோர் தினம் – கஹடோவிட Y.M.M.A. க்கு விசேட சான்றிதழ் - June 14, 2010 by Media Voice Of Kahatowita
இன்று (ஜூன் 14) உலக இரத்த தானம் செய்வோர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனையொட்டி நேற்றைய தினம் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையால் நிட்டம்புவ நகரில் விசேட வைபவமொன்றும் இரத்ததான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

வத்துபிட்டிவல வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பல்வேறு வகையில் ஒத்துழைத்த பலரும் அமைப்புகளும் இங்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். எமது ஊரில் இயங்குகின்ற லு Y.M.M.A. கிளை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தமைக்கான சிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் வைத்தியசாலை அதிகாரிகள் வைத்தியர்கள் மதகுருமார்கள் நிட்டம்புவ நகர வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளனம் உதயம் - June 1, 2010 by Media Voice Of Kahatowita
கடந்த சில மாதங்களாக பல சுற்றுக்களாக நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முஹியித்தீன் ஜூம்ஆ மஸ்ஜித் மஸ்ஜிதுன்னூர் ஜூம்ஆ மஸ்ஜித் மஸ்ஜித் ஜாமிஃ ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் ஓகொடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளிலிருந்து பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது தற்காலிக நிர்வாக சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரில் சில காலங்களாக நிலவி வரும் சமூக சீர்கேடுகள் மற்றும் ஒழுக்க வீழ்ச்சி போன்றவற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இந்த அமைப்பின் மூலம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.
 
இந்த அமைப்பின் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்ற இலக்குகளை அடைய  ஊர்மக்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும்.
 
எனவே இந்த அமைப்பின் நல்ல முயற்சிகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து தோள் கொடுப்போம்.

மைலோ கிண்ண உதைபந்தாட்டம் – அல் பத்ரியா மாவட்டச் செம்பியன் - May 25, 2010 by Media Voice Of Kahatowita
மைலோ கிண்ணத்திற்காக நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ச் சுற்றுப் பபொட்டியில் 17 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான பிரிவில் அல் பத்ரியா சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானமோ  வேறு வசதிகளோ இல்லாமல் இம்மாணவர்கள் மாவட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டமை வரவேற்கத் தக்கதாகும். என்றாலம் பாடசாலை நிர்வாகம் இந்த மாணவர்களை சரியான மறையில் நெறிப்படுத்தினார்களா என்பது கேள்விக் குறியே. இம்முறை க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள இம்மாணவர்கள் அதி கூடிய காலத்தை இந்த விளையாட்டக்காhச் செலவு செய்தமையும் இன்று வரை அதன் பெருமை பேசிக் கொள்வதிலுமே காலத்தைக் கழித்து வருவதும் கவலைக்குரியது.  40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இந்த வகுப்பில் விளையாடுகின்ற மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்காதன சூழலை பாடசாலை நிர்வாகம் ஏற்படுத்திக் கொடக்கவில்லை என பல பெற்றோர்கள் கவலைப் படுகின்றனர். மாவட்டச் சம்பியன் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பாடசாலை நேரத்தில் ஊருக்குள் ஊர்வலம் சென்றமையும் ஊர்மக்கள் மத்தியல் பரவலாக கவலையுடன் பேசப்படுகின்றது.இந்நிலையில் எஞ்சியிருக்கின்ற சில மாதங்களையாவது இம்மாணவர்கள் கல்விக்காச் செலவிட்டு பரீட்சையில் சித்திபெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ஆசிரியர்களும் பெற்றோரும் மிகவும் அக்கறையுடன் இம்மாணவர்கள் வடயத்தில் செயற்படுவது இன்றியமையாததாகும்.
« old entrys
Daily hadees
------
Recent Comments