Category: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ
நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْن
எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286
அன்புள்ள வாசகர்களே
உலகில் பிறந்த மனிதன் பல்வேறு விதமான தேவைகளை உடையவனாக இருக்கின்றான். மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் தனது தேவைகளை மழுமையாக பெற்றுக் கொள்ள முடிவதில்லை. அது மட்டுமன்றி மனிதனது எல்லையில்லாத ஆசை என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி ஷைத்தான் மனிதனை தவறான வழியில் இட்டுச் செல்லவும் முயற்சி செய்கின்றான்.
எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதித்த வழிகளில் நாம் முயற்சி செய்வதோடு அதிகமாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது அவசியமாகும். அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் எமக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் பல விதமான பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
பிரார்த்தனை ஒரு அமலாகும். பிரார்த்தனைகளை ஏற்று அல்லாஹ் எமது தேவைகளை நிறைவேற்றுவதோடு பிரார்த்தனை செய்தமைக்காக பிரத்தியேகமான நன்மைகளையும் அள்ளி வழங்குகின்றான்.
ஏம்மில் அதிகமானோர் அல்குர்அனில் இடம்பெற்றுள்ள மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளை அறியாமல் இருக்கின்றார்கள். இவற்றை நாம் அறிந்து அதனடிப்படையில் பிரார்த்தனை செய்யும் போது எம் வாழ்வில் அல்லாஹ்வின் அருள் பொழிவது நிச்சயம்.
எனவே நாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் என்ற “லேபலின்” கீழ் அல்குர்அனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகளைத் தொகுத்துத் தர எண்ணியுள்ளோம். எமது தளம் மிக விரைவில் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும் போது இப்பிரார்த்தனைகள் தனியான பகுதியாக இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்.
குர்ஆனிலிருந்து..
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201