Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif

Category: செய்திகள்

Dr. ஸாகிர் நாயக் இலங்கை வருகை - May 11, 2010 by Media Voice Of Kahatowita
இஸ்லாமிய மார்க்க அறிஞரும் பேராசிரியருமான ஸாகிர் நாயக் அவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இஸ்லாத்தைப்பற்றி விஞ்ஞான ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் மாற்று மதத்தவரிடையே பிரச்சாரம் செய்து வருகின்ற சமகால அறிஞர்களில் Dr. ஸாகிர் நாயக் அவர்கள் முக்கியமானவராவார். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2010.05.23 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 9.00 மணிவரை அவரது உரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கின்றது. அல்லாஹ் இருக்கின்றான் என்பதை தர்க்க ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் நிறுவுகின்ற தலைப்பில் அவரது உரை அமையவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். முடிந்தவரை மாற்று மத நண்பர்களை அழைத்து வருமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெண்களுக்கான பிரத்தியேக இடவசதியும்  ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றது.
பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார் - March 27, 2010 by Media Voice Of Kahatowita
  பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் நாட்டுக்கு அல்லது அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் குறித்துப் போதுமான விளக்கம் தராத பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிங்களப் பெயருடைய அப்பெண் முஸ்லிம்களைப் போல் உடை அணிவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பாஹ்ரேனில் வெளியாகும் ‘கல்ப் டெய்லி நியூஸ்’ ,

“தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரா மலனி பெரேரா என்றழைக்கப்படும் பெண் அவரது இள வயதிலிருந்து, அதாவது 1980 களின் மத்திய காலப்பகுதியிலிருந்து பாஹ்ரேனில் வசித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டுள்ளதுடன் அவரது பெற்றோர் சகோதரிகளும் மதம் மாறியுள்ளனர்.

பாஹ்ரேனில் இருக்கும் அவரது சகோதரி தெரிவிக்கையில்,

“இஸ்லாம் மதம் குறித்தும், மதங்களை ஒப்பிட்டும் இரு புத்தகங்களை சாரா மலனி பெரேரா எழுதியுள்ளார். இவற்றுள் ஒன்று ‘இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு’. இந்தப் புத்தகத்தில், ஏன் அவர் மதம் மாறினார் என்பது குறித்து எழுதியுள்ளார்” என்றார்.
நன்றி – வீரகேசரி

உலகின் துணிச்சல் மிக்க பெண்ணுக்கான விருது இலங்கை முஸ்லிம் பெண்மணிக்கு - March 13, 2010 by Media Voice Of Kahatowita

2010ம் ஆண்டின் தைரியம் மிகுந்த பெண்மணிக்கான விருதினை இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளரான முகமட் மஜித் ஜென்சிலா பெற்றுக் கொண்டுள்ளார். இந்த விருது வழங்கும் வைபவம் அமெரிக்காவில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் அமெரிக்காவின் முதற் பெண்மணி மிசெல் ஒபாமா மற்றும் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் கிலாரி கிளிண்டன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். முல்லைத்தீவு தண்ணிஊற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1990ம் ஆண்டு புலிகளால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது வெளியேறிவந்து புத்தளத்தில் நலன்புரி நிலையத்தில் குடியேறினார். அதனைத் தொடர்ந்து மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் முகமாக 1993ம் ஆண்டு சமூக நம்பிக்கை நிதியம் என்ற நிறுவனமொன்றினை ஆரம்பித்து வைத்தார். இதன்மூலம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களினதும்இ புத்தளம் மக்களினதும் அடிப்படை தேவைகளை ஜென்சிலா மஜித் இதுவரை பூர்த்திசெய்து வந்துள்ளார். அத்துடன் முஸ்லிம் தமிழ் சமூகங்களை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இவர் அயராது ஈடுபட்டு; வந்துள்ளார். ஜென்சிலா மஜித்தின் இந்த சேவைகளுக்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவி முக்கியமானதாக அமைந்திருந்தது. தற்போது இவரது நிறுவனக் கிளைகள் வவுனியாஇ மன்னார்இ அநுராதபுரம்இ புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் இயங்கி வருகின்றன. ஜென்சிலாவுடன் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10பெண்களுக்கு நேற்று இந்த விருதுகள் வழங்கப்பட்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2007ம் ஆண்டு தொடக்கம் சர்வதேச மகளிர் தினத்தை இலக்காகக் கொண்டு துணிச்சல்மிக்க பெண்களைத் தெரிவுசெய்து அமெரிக்கா

மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டி - February 14, 2010 by Media Voice Of Kahatowita

மேல் மாகாண சபையின் கம்பஹா மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் எதிர் வரும் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். இன்று (2010.02.14) அவரது நீர்கொழும்பு காரியாலயத்தில் இடம் பெற்ற கட்சியின் முக்கிய கலந்துரையாடலொன்றின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது.
இக்கூட்டத்தில் கம்பஹா மாவட்டத்தின் எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
பல விதமான கருத்துகள் முன் வைக்கப்பட்ட போதும் கட்சியின் போராளிகள் அனைவரும் சாபி ரஹீம் இத்தேர்தலில் போட்டியிட வேண்டுமென ஏகமனதாக தீர்;மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு இறுதியாக உரையாற்றிய சாபி ரஹீம் தான் இத்தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பது கம்பஹா மாவட்ட முஸ்லிம்களுக்கு பாராளுமன்ற பிரதிநிரதித்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகும் எனக் குறிப்பிட்டார். மாகாண சபை பிரதிநிதித்துவம் மூலமாக நாம் பெற்றுக் கொண்ட நன்மைகள் போன்று பல மடங்கு நன்மைகளை எமது சமூகம் பெற்றுக் கொள்வதற்காக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் ஒன்று பட்டு செயற்படவேண்டுமென்றும் இன்னும் ஒரு சில தினங்களில் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


- January 19, 2010 by Media Voice Of Kahatowita

மஹிந்த, பொன்சேகா இன்டர்நெட் மூலம் பிரசாரம் !

 இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்,தற்போது இன்டெர்நெட் மூலமாகவும், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் இம்மாதம் 26ல் நடக்கவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி மஹிந்த, ஆளும் கட்சி சார்பாகவும், ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா எதிர்க்கட்சி கூட்டணி சார்பாகவும் போட்டியிடுகின்றனர். இருவரும் இலங்கை முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதற்கு முந்தைய தேர்தல்களில் இல்லாத வகையில், இந்த தேர்தலில் முற்றிலும் புதுமையாக இன்டெர்நெட் மூலமாகவும் இரு தரப்பினரும் பிரசாரத்தில் தூள் பறத்துகின்றனர். இ-மெயில், பிளாக் மற்றும் இணைய தளங்கள் மூலமாக தீவிர பிரசாரம் நடக்கிறது.இதுகுறித்து,  மொரட்டுவ பல்கலை கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியர் சந்தனா கமகே கூறுகையில்,”இந்த தேர்தலில் இன்டெர்நெட் மூலமாக பிரசாரம் செய்வதற்கு இரு கட்சிகளுமே அதிகமாக பணம் செலவு செய்துள்ளனர். இதில், வருத்தப்படும் விஷயமும் உள்ளது. பலர், இதை தவறான நோக்கத்துக்காக பயன் படுத்துகின்றனர்’என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை சீர்குலைக்கும் வகையில்  ஆளும் கட்சி சார்பில், இன்டெர்நெட் மூலமாக பிரசாரம் செய்யப்படுகிறது. இதற்காக, அரசு பணம் லட்சக்கணக்கில் செலவிடப்படுகிறது. அரசுக்கு ஆதரவான செய்திளை வெளியிடுவதற்காக பல இணைய தளங்களுக்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துளோம்’ என்றார்.
மீடியா துறை அமைச்சர் லக்ஷ்மண் யாபா அபெவர்த்தனா கூறுகையில், எதிர்க்கட்சி சார்பில்  அரசுக்கு எதிராக இன்டெர்நெட் மூலமாக பிரசாரம் நடக்கிறது. இலங்கையில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் இதுபோன்ற பிரசாரம் நடக்கிறது’என்றார்


- January 9, 2010 by Media Voice Of Kahatowita

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கஹட்டோவிட தேர்தல் காரியாலயம் மீது இரண்டாவது முறையாகவும் தாக்குதல்

ஜனாதிபதித் தேர்தலின் எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களால் கஹட்டோவிடவில் நடாத்தப்பட்டு வந்த தேர்தல் காரியாலயம் ஏற்கனவெ தீயிட்டுக் கொளுத்தப்பட்டமை தெரிந்ததே. இந்நிலையில் அக்காரியாலயத்தை மீண்டும் புணரமைத்து வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் ஹர்ஷன ராஜகருன மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் நாஸர் ஆகியோரால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
எனினும் அதே தினம் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காடையர்களால் காரியாலயம் முற்றாக உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை விரும்புகின்ற ஊர் மக்கள் இச்சம்பவத்தைக் கண்டிப்தோடு தேர்தல் காலங்களில் ஊரின் ஒற்றுமையைக் குழைக்கக் கூடிய செயல்கள் இடம் பெறுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே காரியாலயம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகத் தெரிவிக்கின்றனர். அதே வேளை அச்சம்பவத்தைக் கண்டித்து ஜூம்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது - January 4, 2010 by Media Voice Of Kahatowita

உலகையே ஆட்டிப்படைத்து வரும் பன்றிக் காய்ச்சல் (Swine flu) பற்றிய பீதி அடங்குவதற்கு முதல் பன்றிகளில் இருந்து மனிதருக்கு தொற்றிய (H1N1) வைரஸுக்கள் போன்று நாய்களில் தொற்றைக் காண்பிக்கும் நாய்க் காய்ச்சல் (Dog flu) வைரஸுக்களின் (H3N8) தாக்கம் அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் நாய்களிடையே அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸுக்களின் தொற்று மனிதர்களிடையே அவதானிக்கப்படாத போதும் தொற்றுள்ள நாய்களில் இருந்து அவற்றுடன் நெருங்கி உறவாடும் மனிதருக்கு தொற்றக் கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த வைரஸின் தொற்றுக் கண்ட நாய்களில் காய்ச்சல்இபசியின்மைஇ சுவாசம் சம்பந்தப்பட்ட அல்லது சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கக் காணப்படும்.

இந்த வைரஸின் தொற்றுக்கண்டு இதுவரை ஒரு நாய் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயர் தொழில் நுட்பத்திலும் ஆங்கிலத்திலும் சிறந்த தேர்ச்சியைப் பெறுவதன் மூலமே சக்திமிகு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் - December 7, 2009 by Media Voice Of Kahatowita


cah; njhopy; El;gj;jpYk; Mq;fpyj;jpYk; rpwe;j Njh;r;rpiag; ngWtjd; %yNk rf;jpkpF nghUshjhuj;ijf; fl;bnaOg;g KbAk;

my; gj;hpah k.tp. fzdpg; gphpT khzth;fsplk; ifaspg;g itgtj;jpy; gpujp mikr;rh; kNahd; K];jgh

my; gj;hpah k.tp. apy; ePz;lfhyf; FiwghlhftpUe;j fzdpg; gphpT ,d;W ntF tpkhpirahf Muk;gpj;J itf;fg;gl;lJ. cah; fy;tpg; gpujp mikr;rh; my;`h[; kNahd; K];jgh mth;fs; ,d;W itgthPjpahf ,g;gphpit Muk;gpj;J itj;jhh;.

fzdpg;gphpT jpwe;J itf;fg;gl;l gpd; mjpgh; M.I.M. up\hd; mth;fspd; jiyikapy; nghJf; $l;lnkhd;Wk; ,lk; ngw;wJ.

,q;F jiyikAiuahw;wpa mjpgh; mth;fs; ,f;fzdpfisg; ngw;Wj; je;jikf;fhf gpujp mikr;rUf;f ed;wp njhptpj;jNjhL vjph;fhyj;jpYk; vkJ ghlrhiyf;F cjtp nra;a Ntz;LnkdTk; njhptpj;jhh;.

gpujp mikr;rh; jdJ ciuapy; ,e;ehl;by; khwp khwp te;j muRfs; rpWghd;ikapdiu Vkhw;wpa tuyhWfNs cs;sd vd;Wk; rpWghd;ikapdiu mizj;Jf; nfhz;L mth;fsJ mbg;gilg; gpur;rpidfisj; jPh;g;gjw;F ngUk;ghd;ik kf;fsJ kdepiyapy; khw;wj;ij Vw;gLj;j Ntz;ba fl;lhaj;jpy; ehk; ,Ug;gjhff; Fwpg;gpl;lhh;.

,f;fzdpfs; ,g;ghlrhiy khzth;fspd; njhopy; El;gf;fy;tpapy; rpwe;j xU Muk;gkhf mika jhd; gpuhh;j;jpg;gjhfTk; mth; Fwpg;gpl;lhh;. midtUk; murhq;fj; njhopy;fisNa ngw Ntd;Lk; vd;w kdepiy khwp njhopy; el;gf; fy;tpapd; Clhf jdpahh; Jiwapy; mjpf tUkhdj;ij

vkJ r%fKk; vKJ ehLk; vjph; Nehf;Ffpd;w gpur;rpidfSf;fhd jPh;it gy kl;lq;fspy; jhd; Kd;itj;jpUg;gjhfTk; KO ehl;Lf;Fk; mj;jPh;tpid Kd;itg;gjw;fhf vjph;tUk;[dhjpgjpj; Njh;jypy; jhd; Nghl;baplTs;sjhfTk; mjw;fhf jdJ mikr;Rg;gjtpia xU thu fhyj;jpDs; ,uh[pdhkh nra;atpUg;gjhfTk; mwptj;jhh;.

my; gj;hpahtpd; gioa kdzth;fshd [dhg; M.H.M. fpah]; kw;Wk; M.K.M. m];`h; MfpNahh; Nkw;nfhz;l Kaw;rpapd; gadhf ghlrhiy mgptpUj;jpr;rq;f mq;fj;jth;fs; ,uz;L tUlq;fSf;F Kd;dh; gpujp mikr;riur; re;jpj;J ghlrhiyapd; FiwghLfisr; Rl;bf;fhl;bdh;. Mjd; gadhf ghlrhiyf;F Nehpy; tUif je;J Fiwfisf; fz;lwpe;J cldbahf jdJ gd;Kfg;gLj;jg;gl;l epjpapypUe;J MW fzdpfisAk; mjw;Fj; Njitahd NkYk; gy cgfuzq;fisAk;; ngw;wj; je;jhh;.

,e;j tsq;fs; ngw;Wf; nfhLf;fg;gl;L ,uz;L Mz;Lfs; fope;jpUe;j epiyapYk; fzdpfis itg;gjw;fhd ,ltrjp kw;Wk; jsghlq;fs; ,d;ikahy; khzth;fspd; gad;ghl;Lf;F toq;f KbahjpUe;jjhf mjpgh; Fwpg;gpl;lhh;. ,e;j trjpfs; Vw;gLj;jg;gl;Ls;sjhy; khzth;fSf;fhd njhlh;ghly; njhopy;El;g ghlj;ij cldbahf Muk;gpf;tpUg;gjhfTk; Nkyjpf fzdpg;gapw;rp tFg;Gfis elhj;jtpUg;gjhfTk; mjpgh; njhptpj;jhh;.

fy;tpj; jpizf;fsj;jpd; epfo;r;rpj;jpl;j;jpd; fPo; vkJ ghlrhiyf;F fzdp miwnahd;W ngw;Wj; jug;gl;Ls;sjhfTk; ,jd; fPo; NkYk; 15 fzdpfSk; jsghlq;fSk; ntF tpiutpy; fpilf;ftpUg;gjhy; ,j;jpl;lj;ij NkYk; tphpT gLj;jtpug;gjhfTk; mjpgh; nrhd;dhh;.

- November 7, 2009 by Media Voice Of Kahatowita
கஹடோவிட சம்பந்தமான மார்க்க உலக விவகார கருத்து முன்வைப்புகள் விமர்சனங்களுக்கான ஓர் தளம்
Daily hadees
------
Recent Comments