அத்தோடு கடந்த சில காலங்களாக இறைச்சிக்கடைப் பகுதியில் சாராயம் பதுக்கி வைக்கப்படுவதாகவும் அவ்வப்போது தேவைப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்படுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன.
பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்ற பெயரில் ஒருகுறு நகல் பரப்பப்பட்டு வருகிறது.அந்தச் செய்தியில் சில தொலைபேசிஇலக்கங்களும் அவைகள் சிவப்பு நிறத்தில் வருவதாகவும் அவைகளுக்கு பதில்அளித்தவர்களில் 27 நபர்கள் மரணித்துவிட்டதாகவும் அதில்இடம்பெற்றிருந்தது.இதனால் பலர் பீதியடைந்து தொலைபேசிகளை ஓப் செய்துள்ளனர்.
உண்மையில் இச்செய்தியில் எந்த உண்மையும் கிடையாது.தொலை பேசிவலையமைப்பாலர்களுக்கு பணம் ஈட்டிக் கொடுக்கும் வேலைகளில் ஒன்றாகவே உள்ளது.தொலைபேசிகளின் ஓசை அலை வேகம் மாற எந்த வாய்ப்பும் இல்லை.மாறுமாயின்தொலைபேசிகளுக்கான அலையுமல்ல.இப்படிப் பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்பிசந்தோசம் அடைபவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும்.அதே நேரம் இந்த செய்திகிடைத்தவர்;கள் அவைகளைப் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அச்சத்தைப்பரப்புவது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
‘பாதுகாப்பு அல்லது பயம் பற்றியசெய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதை பரப்பி விடுகின்றனர்.அதைஇத்தூதரிடமும் தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் அதைஅவர்களிடமிருந்து ஆய்ந்து எடுப்போர் அறிந்து கொள்வார்கள்.அல்லாஹ்வின்அருளும் அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர(மற்றவர்கள் ) சைத்தானைப் பின்பற்றி இருப்பீர்கள் (நிஸா:83) என்று அல்லாஹ் தவறான செய்திகளை பரப்புவதை எச்சரிக்கிறான்.
அவ்வாறான செய்திகளை பொறுப்பானவர்களிடம் கொடுத்து விசாரிப்பதை வழிமுறையாகச் சொல்கிறான்.
தயவு செய்து இது மாதிறி விடயங்களை இதன் பிறகாவது தீர விசாரிக்காமல்பரப்புவதைத் தவிர்ப்பதுதான் மார்க்க ரீதியான அணுகுமுறை என்பதை அனைவரும்நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனிக்கும் ஐக்கிய தேசிய முண்ணனிக்கும் சவாலாக கஹடோவிடவில் மூன்றாம் அணியொன்று உருவாவதற்கான சாத்தியம் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை மிகப்பெரும்பான்மையாக ஆதரித்த கஹடோவிட மக்கள் இத்தேர்தலில் என்ன முடிவை எடுப்பார்களென்பதை வெளிப்படையாக அறிய முடியாத நிலை காணப்படுகின்ற இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தலைமையில் களமிறங்கியிருக்கின்ற ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பை ஆதரிக்கவும் திரு. விஜித ஹேரத் அவர்களை அழைத்து பிரச்சாரக் கூட்டம் நடாத்தவும் ஒரு குழுவினர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்டிருக்கின்ற நிலையைக் கவனத்தில் கொண்டு நாடு செல்கின்ற அரசியல் நீரோட்டத்தை பார்த்து களத்தில் இறங்குவதே ஊருக்குச் சிறந்தது எனப் பலர் பேசிக் கொள்வதையும் கேட்க முடிகிறது.
அத்தனகல்ல பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நாஸர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி ஆளும் கட்சியில் இணையப் போவதாக நம்பத்தகுந்த செய்திகள் கிடைக்கின்றன. அத்தனகல்ல பிரதேசத்தில் பலர் சொந்த நலன் கருதி முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஏனைய கட்சிகளுக்கு மாறியிருந்த போதும் மக்கள் பிரதிநிதியொருவர் கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு தாவுவது இதுவே முதற் தடவையாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை அத்தனகல்ல பிரதேச சபையில் தனது பிரதிநிதியை இடைவிடாமல் பெற்று வந்ததோடு கஹடோவிடவைச் சேர்ந்த இரண்டு பிரதிநிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
முதலாமவர் காலஞ்சென்ற நியாஸ் நானா அவர்களும் அடுத்தவர் அவரது மகனான நாஸர் அவர்களுமாவர். இவர்கள் இருவரையும் வெற்றிபெறச் செய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கடும் பாடுபட்டனர். இவர்கள் இருவருக்கும் தேர்தலுக்காக ஒரு சதம் செலவு வைக்காமலேயே அன்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் வெற்றிவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களும் நாஸரின் வெற்றிக்கு உதவி செய்தனர். ஏற்கனவே பொதுஜன முண்ணனியில் போட்டியிட்ட இவர் படுதோல்வி அடைந்திருந்தார். அது மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸ_க்காக அல்லும் பகலும் பாடுபட்டவர்கள் பெறாத பல வரப்பிரசாதங்களையும் இவர் பெற்றிருக்கின்றார். இந்நிலையில் பழையவற்றை மறந்து இவ்வாறான ஒரு முடிவை எடுப்பதென்பது நன்றிகெட்ட நடவடிக்கை என்று ஊர் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
ஊரில் பாடசாலையையும் முதன்மைப்படுத்தி சில நாட்களாக இருந்து வரும் பரபரப்பு நிலை மேலும் தொடர்து கொண்டே இருக்கின்றது. யுhர் தரப்பில் நியாயம் என்று கண்டு பிடிக்க முடியாதளவுக்கு செய்திகள் காற்றோடு கலந்து வருகின்றன. பாடசாலை மாணவர் பக்கம் நீதியிருப்பதாக சிலரும் பாடசாலை நிர்வாகத்தின் பக்கம் நியாயமிருப்பதாக பலரும் பேசி வருகின்ற நிலையில் இன்னும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரலாம் எனவும் தெரிகிறது. எது எவ்வாறாயினும் நியாயமான முறையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அப்பாவி மாணவர்கள் நிம்மதியாக கல்வியைத் தொடர வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எமது அவா.
நாளுக்கு நாள் ஊரில் மார்க்க விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் தீய செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதோடு அவைபற்றி கரிசனை செலுத்துகின்றோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தள்ளது.
இவ்வாறு மலிந்து கிடக்கின்ற தீமைகளில் லொத்தர் டிக்கட் வாங்குகின்ற பழக்கமும் ஒன்று. இப்போதெல்லாம் லொத்தர் சீட்டு விற்கின்றவர்கள் பகிரங்கமாகவே குறிப்பிட்ட வீடுகளுக்கு முன்னால் சென்று தமது வாடிக்கையாளரை அழைத்து விற்பனையில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகியுள்ளது.
இதில் வேடிக்கை என்னவெனில் படித்த பொறுப்பு வாய்ந்த சிலரும் இப்பழக்கத்தில் சிக்கியுள்ளதாக சிலர் வேதனையுடன் பேசிக்கொள்கின்றனர். அத்தோடு ஆண்கள் மாத்திரமன்றி தலையை முக்காடிட்டு மறைத்த நிலையில் பெண்களும் லொத்தர் மீது நம்பிக்கை வைத்து அவற்றை வாங்குகின்ற காட்சியையும் காண முடிகின்றது.
ஏற்கனவே ஒருசிலர் எமது ஊரில் லொத்தர் மூலம் லட்சாதிபதிகளாக மாறியதால் மற்றவர்களுக்கும் நப்பாசை பிடித்து விட்டதோ என்னவோ?
ஆனால் ………………………
நமது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் நடந்து கொள்வது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து நடப்பதே மிகச்சரியானது.
கஹடோவிட நிகழ்வுகளை அலசுவதில் ஹிசாம் ஹாஜியாரின் கோழிக்கடை வகிபங்கு முக்கியமானதாகும்.எனவே அங்கு அலசப்படும் முக்கிய செய்திகளும் விமரிசனங்களும் இப்பகுதியில் இடம்பெறும் வெளிநாட்டுச் சகோரர்களும் இனி அங்கிருந்தே கோழிக்கடைக்கு வரலாம்.