Articles Comments

Headline

ஜனாஸா அறிவித்தல்

ஓகொடபொளையைச் சேர்ந்த அமீர் ஹம்ஸா காலமானார். அன்னார் தாஜூல் இனாயாவின் கணவரும் பாத்திமா ராபியாவின் தந்தையும் பாரூக், காலஞ்சென்றவர்களான ஹாரிஸ், தாஸிம், நூர் ஹம்ஸியா ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.07.23) பி.ப. 4.00 மணிக்கு ஓகொடபொளை மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். … Read entire article »

Latest

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் -2

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْن எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286 … Read entire article »

ஜனாஸா அறிவித்தல்

ஓகொடபொளையைச் சேர்ந்த ஐனுல் ஆபிதா காலமானார். அன்னார் காலஞ்சென்ற முகைதீனின் மனைவியும் பாத்திமா சஹ்தியா சம்சுன் நிஹாரா கமருன் நிஸா சித்தி ஸரீனா பஹ்மி (முன்னாள் விமானப்படை வீரர்) நிஸார் ஆகியோரின் தந்தையும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நேற்று (2010.07.20) இரவு 10.00 மணியளவில் மஸ்ஜிதுன்னூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. … Read entire article »

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்

அன்புள்ள வாசகர்களே உலகில் பிறந்த மனிதன் பல்வேறு விதமான தேவைகளை உடையவனாக இருக்கின்றான். மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் தனது தேவைகளை மழுமையாக பெற்றுக் கொள்ள முடிவதில்லை. அது மட்டுமன்றி மனிதனது எல்லையில்லாத ஆசை என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி ஷைத்தான் மனிதனை தவறான வழியில் இட்டுச் செல்லவும் முயற்சி செய்கின்றான். எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதித்த வழிகளில் நாம் முயற்சி செய்வதோடு அதிகமாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது அவசியமாகும். அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் எமக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் பல விதமான பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.பிரார்த்தனை ஒரு அமலாகும். பிரார்த்தனைகளை ஏற்று அல்லாஹ் எமது தேவைகளை நிறைவேற்றுவதோடு பிரார்த்தனை செய்தமைக்காக பிரத்தியேகமான நன்மைகளையும் அள்ளி வழங்குகின்றான். ஏம்மில் அதிகமானோர் அல்குர்அனில் இடம்பெற்றுள்ள மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளை அறியாமல் இருக்கின்றார்கள். இவற்றை நாம் அறிந்து அதனடிப்படையில் பிரார்த்தனை செய்யும் போது எம் வாழ்வில் அல்லாஹ்வின் அருள் பொழிவது நிச்சயம்.எனவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் என்ற “லேபலின்” கீழ் அல்குர்அனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகளைத் தொகுத்துத் தர எண்ணியுள்ளோம். எமது … Read entire article »

ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம். ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்: عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு … Read entire article »

பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக் கூட்டம்

கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 2010.07.25 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிபர் புஹாரி உடயார் தலைமையில் நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பாடசாலையின் அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டம் கூட்டப்படாமல் இருந்த அதே வேளை புதிய அதிபர் நியமனம் பெற்ற பின்னர் பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பெற்றோர்களில் சிலரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் பாடசாலையை ஒரு ஸ்திர நிலைக்குக் கொண்டு வரும் வரை காலதாமதம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது. நிர்வாகக்குழுக் கூட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பெற்றோரதும் பொது மக்களதும் அதிகளவு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  … Read entire article »

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிட அஹமட் விலேஜ் (சாரலங்கா) வைச் சேர்ந்த அப்துல் ரவூப் காலமானார். அன்னார் சித்தி நயீமாவின் கணவரும் மொஹமட் அலி ,மொஹமட் நவாஸ், கலீலுர்ரஹ்மான் ,சித்தி சமீமா ஆகியோரின் தந்தையும் பாரூக்கின் மைத்துனரும் ஆவார்.   ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.07.08) பி.ப. 4.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம் பெறும் … Read entire article »

அன்புள்ள வாசகர்களே!கஹடோவிடவின் முன்னோடி இணையத்தளமான எமதுதளம் வெகுவிரைவில் உரிய தராதரத்துடனும் புதுப்பொலிவுடனும் தோற்றமளிக்கும், இன்ஷா அல்லாஹ்! … Read entire article »

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

வேகமாகப் பரவி வருகின்ற டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தனகல்ல பிரதேச செயலகம் மூலமாக தரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் கஹடோவிடவில் உள்ள இரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வசிக்கின்ற மக்களை அறிவுறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டள்ளது. வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதோடு நீர் நிரம்பி நிற்கக் கூடிய அனைத்து பொருட்களையும் அப்புறப்படத்தமாறு பள்ளிவாசல்களுடாக கிராம சேவை அலுவலர்கள் மக்களுக்கான அறிவித்தல்களை விடுத்தள்ளதோடு அதிகாரிகள் இவற்றைப் பரீட்சிக்க வருவதாகவம் அறிவித்துள்ளனர். சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு குற்றப்பணமும் அறவிடப்படும் எனவம் … Read entire article »

369 கஹடோவிட கிராம சேவகர் பிரிவுக்கு கிராம சேவை அலுவலராக ஜனாப் M.H.M. ஜவுபர் மீண்டும் நியமனம்

இல. 369 கஹடோவிட கிராம சேவகர் பிரிவுக்கு கிராம சேவை அலுவலராக ஜனாப் M.H.M. ஜவுபர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக சிங்கள மொழியில் மாத்திரம் சேவையாற்றுகின்ற கிராம சேவை அலுவலர்களே கடமையாற்றியதால் தமது தேவைகளை நிறைவேற்றுவதில் ஊர் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அதற்கு தீர்வாக தமிழ் மொழி மூல அலுவலர் நியமிக்கப்பட்டிருந்த போதும் அவருக்கு சிங்கள மொழியில் பரிச்சயமில்லாதிருந்ததால் உரிய பயன் மக்களுக்குகக் கடைக்காத நிலையே காணப்பட்டது. ஏற்கனவே கடமையாற்றிய மன்னாரைச் சேர்ந்த ஜனாப் அப்துல் ரவூப் அவர்கள் யுத்தம் முடிவுக்குக் கொண்ட வரப்பட்டதால் மன்னாருக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஜனாப் M.H.M. ஜவுபர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் இவர் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பதாலும் ஊரைச் சேர்ந்தவராக இருப்பதாலும் மக்களது தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இவர் எற்கனவே பல ஆண்டுகளாக இப்பிரிவில் சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. … Read entire article »